சூரியதிசை -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . ,சூரிய திசை பயணதுடன் பயணிக்கும் தாங்களின் வாசகன் நான் ,தாங்கள் செல்லும் பயணம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பவன் என்ற முறையில் எழுதும் கடிதம் ,பலவிதமான எழுத்தாளர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் படித்தாலும் ஒரு முழு திருப்தி எனக்கு ஏற்படவில்லை ,ஆனால் தாங்களின் கட்டுரைகள் என்னை முழுதும் ஆட்கொள்கிறது ,காரணம் அதிகம் செயற்கையான வர்ணனை கிடையாது ,பயணம் செய்யும் இடங்களையும் ,அங்குள்ள மக்களின் சமூக ,பொருளாதார நிலை ,அவற்றின் வரலாறு ,அவர்களின் கலை ,கலாசாரம் , தினசரி வாழ்கை முறை ,அங்குள்ள நுண்அரசியல் ,மற்றும் பிற மாநில மக்களுடன் ஒப்பிட்டு அங்குள்ள யாதாத்த நிலையை எழுதும் தாங்களின் பயணம் தொடர தங்களுக்கும் ,மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.

பாஸ்கரன் ராஜகோபாலன்

அன்புள்ள ஜெ.
இனிமேல் யாரும் உங்களைப் பார்த்து,
“என்ன பெரிய கொம்பு முளைச்சிருக்குதா?”
என்று கேட்க மாட்டார்கள்..!
(அவர்களுக்கு இருந்த அந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்துவிட்டீர்கள்)

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

வடகிழக்கு மாகாணங்கள் என்ற ஒற்றைச் சொல் வழியாக அறியப்பட்டிருந்த விரிந்த நிலப்பரப்பை ஒரு பருந்துப்பார்வை வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வியப்பூட்டும் இடங்கள். குறிப்பாக உனக்கோட்டி நீங்கள் வெண்முரசில் எழுதிய அசுரர் நகரம் போலவே இருந்தது. ஆனால் நுணுக்கமான தகவல்கள்தான் இந்தப்பயணக்கட்டுரையை மனம் கவர்ந்தவை . அந்த வாழ்க்கையை முழுமையாகவே காண்பது போல உணரவைத்தவை

சிவம்

ஜெ,
மேகாலயாவின் ஆறுகளின் நீல நிறத்திற்கு ஆலை கழிவுகளும் காரணமாக இருக்கலாம்.

Meghalaya rivers turn blue, pollution blamed [Dec/2014]
http://www.freepressjournal.in/meghalaya-rivers-turn-blue-pollution-blamed/

​நன்றி​​​

கார்த்திக்

கார்த்திக்

இருக்கலாம்

ஆனால் கிராங்ஸுரி மலையடிவாரத்தில் உள்ளது. மேலே தொழிற்சாலைகளேதும் இல்லை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37
அடுத்த கட்டுரைமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை