கடிதங்கள்

பிரார்த்தனாஞ்லி எனும் இறைவேண்டல்களின் தொகுப்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் மற்றும் அவர் மனைவி லில்லி அமிர்தம் ஆகியோரின் நெடும் இறைபணியின் தொடர்சி ஆகும். உலக திருசபை மாமன்றத்தின் ஒருன்க்கிணைப்பு கற்பிப்பளராகவும் தென் கேரள சி எஸ் ஐ அத்தியட்சராகவும் தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் விரிவுரையளரகவும் முதல்வரகவும் தன் கூர் திறமைகளை இறைவல்லுனர்களுக்கும் இறைபற்றாளர்களுக்கும் ஏன் பனைதொழிலாளர்களுக்கும் எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தவர் அறிவர் சாமுவேல் அமிர்தம். இயெசு தனது சீடர்களுக்கு கற்பித்த இறைவேண்டலயே மையமாக கொண்டு தனது இறைபணியில் சேகரித்த அரிய பல மன்றாட்டுக்களை தனது மனைவியோடு சேர்ந்து தொகுத்தளிக்கின்றார்.

 பேராசிரியர் லில்லி அமிர்தம் சிறந்த ஓவியர் சமயற்கலை நிபுணர் பாறசாலயை அடுத்துள்ள கிராம மற்றும் வறிய பெண்களுக்காஅ சேவை புரிந்துவருகிறார். தனது பேரக்குழந்தைகளுக்காக அன்பும் இறைபற்றும் நிறைந்த தாத்தக் பாட்டி தேடி சேகரித்து கொடுத்த இறையியல் பொக்கிஷம் இது.

தனது முகவுரையில் இறைவேன்டல் குறித்த தன் தரப்பை அவர் தேர்ந்த இறையியல் வல்லுனராக மட்டுமல்லது பொறுப்புள்ள போதகராகவும் தெழிவுபடுத்துவது இப்புத்தகத்தின் ஆழ்ந்த இறைதேடலை உறுதிப்படுத்துகின்றது. ‘இறைவேண்டல் என்பது விண்ணப்பம்  ஆயினும் அது பிரருக்காக அதிகமக்கவும் நமக்காக சொற்பமாகவும் இருப்பதுவே’ என் கிறார். அதுபோலவே இறைவேண்டல் இறையோடுகூடிய உரையடல் எனினும் இறைவார்த்தயை அதிகமாக நிதானிக்கவும் சொற்பமாக பேசுவதுமே என உறுதிபடக்கூறுகின்றார். இன்று சில கிறிஸ்தவ மத போதகர்கள் தொலைபேசியில் கடவுளோடு பேசுவது போன்ற பிம்பத்தை ஆசிரியர் குறுனகையோடு மறுக்கிறார்.

பல புரக்தன இலக்கியங்களிலிருந்தும் பின்நவீன நூல்களிலும் இருநது ஆசிரியர் பல வேண்டல்களை சரளமாக எடுத்தாழ்கிறார். கிறிஸ்தவ இறையியலாளர்கள் பற்றாளர்கள் புனிதர்களோடு கூடவே பிற மத சான்றோர்கள் சாமானியர்கள் மற்றும் புனிதர்களின் இறைவேண்டல்களை இழையோடவிட்டிருப்பது வேண்டல் செய்யுமிடம் ஒன்றே என அறுதியிட்டுக்கூறுகிறது. வேண்டல் செய்யும் காலம் சூழல் நபர்கள் என வகைவகையாக வேண்டல்கள் காணக்கிடைக்கின்றன. மனிதன் இறைவேண்டல் செய்வது நாமறிநத்தே. இன்க்கோ எருது சேவல் ஆமை எறும்பு மட்டுமா கேரள யானை கூட நகைசுவை வேண்டல் உகுப்பது அருமை. கருத்தாழமிக்க சூழலியல் வேண்டல் காதலாகி     கஸிநதுருகும் வேண்டல் இறைவ்னை பற்றிக்கொள்ளும் சீடத்துவ நெஞ்சை ஊடுருவும் ஓரிருவரி அம்பு வேண்டல்கள் என சுமார் 377 வேண்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன. துயருற்றோருக்கான வேண்டல்கள் புடமிடப்பட்ட ஆறுதலின் வார்த்தைகள்.

இதன் நெறியாளர் மதுரையைச் சார்ந்த நந்தினி முரளி. இவர் ஆங்கில பத்திரிகைகளிலே தொடர்ந்து எழுதுகிறவர் பெண்ணிய கருத்தியல் கொண்டவர். முன்னுரை அளிதுள்ள அறிவர் தயன்சந்த் கார் அமிர்தம் அவர்களின் தலைசிறந்த மானவர். பிற்பாடு  தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காட்சன் சாமுவேல்

மொழி ஆங்கிலம்      விலை ரூ 150     பக்கங்கள் 288     முதற் பதிப்பு 2004
 
கிடைக்குமிடம்

The Book Shop
TamilNadu Theological Seminary
Arasaradi
Madurai- 625010
ph:0452 260 2352
 
Grace Kenneth Foundation Hospital
34 Kennett Road
Ellis Nagar
Madurai- 625010
ph:0452 260 1849
 
The Amirtham Ecumenical Trust
Bethany, Cheruvarakkonam
Parassala Post 695502
Thiruvananthapuram.

***

அன்புள்ள ஜெயமோகன்,

என் முத்தசியம்மா வறுபுரத்தியதால், 10 ஆண்டுகுளுக்கு முன் அமேரிக்கா வந்த போது,  உடல் வலிக்காக “கொட்டம்சுக்காதி” மற்றும் “அச‌ன‌ம‌ஞ்ஞிஷ்டாதி”, வ‌யிற்று ஜீர‌ன‌த்துக்காக‌ “த‌ச‌மூலாரிஷ்ட‌ம்” கொண்டு வந்தேன்.

நிவாரணத்தில் அலோபதியய் தூக்கி சாப்பிட்டது.

இன்றும் அம்மருந்துகள் உள்ளன, என் முத்தசியம்மா இல்லை.

பாபு

****

அன்புள்ள ஜெயமோகன்,        ஐரோப்பா பற்றி நீங்கள் கூறுபவை ஆர்வ்மூட்டுவையாக உள்ளன. நான் கடந்த சில வருடங்களாக இங்கு இருந்து வரு்கிற அனுபவத்தில், இது கண்டிப்பாக ஒரு நாகரீக சமுதாயமாக தான் எனக்கு படுகிறது. இங்கு இருக்கும் இலவச கல்வி, மருத்துவம்,போக்குவரத்து வசதி போன்ற புற கட்டுமான வசதிகள் மட்டும் அல்ல. இங்கு குழந்தைகளுக்கான உரிமைகள்,பெண்கள் உரிமைகள், திருமணம் பாலுறவு முதலியவற்றில் அவர்களது மதிப்பீடுகள், அன்றாட சமூக நடவடிக்கைகளில் அவர்கள் காட்டும் ஒழுங்கு மற்றும் நேர்மை போன்ற  பல விடயங்கள் மிக்வும் ஆச்சிரியப்பட வைக்கின்றன. ஒரு சராசரி ஐரோப்பியன்,சராசரி இந்தியனை விட பல மடங்கு மேம்பட்டவனாக இருக்கிறான். இது சுரண்டி கொண்டு வந்த செல்வத்தால் மட்டும் சாத்தியமா? நாளையே இந்தியாவிற்கு எல்லா செல்வங்களும் கிடைத்துவிட்டாலும் இப்படிப்பட்ட  நாகரீக சமுதாயத்தை உருவாக்க முடியுமா? சந்தேகம் தான்.

       இதை சொல்லும் வேளையில், இவர்கள் முன் பீற்றி கொள்ள நமக்கு ஏதாவது இருக்காதா என்று ஏங்குவதும் உண்டு. அவர்கள் செல்வத்திற்கு பதிலாக,’எங்களிடம் திருடிய பணம் தானே இதெல்லாம்’ என்று சொல்ல்லாம். ஆனால், அவர்கள் அடைந்துள்ள நாகரீக வளர்ச்சிக்கு என்ன பதில்   சொல்வது?

அன்புடன்,

கோகுல்


அன்புள்ள நண்பருக்கு

பொருளியல் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்ட நாடுகள் ஒருவருக்கொருவர் நிலவும் ஐயங்களை பெருமளவு குறைக்க முடியும். அதுவே ஒரு நல்ல சமூகத்துக்கு தேவையான அடிபப்டைகளை உருவாக்கிவிடும். ஐரோபாவின் பண்பாட்டு வெற்றிகளை நான் மறுதலிப்பவன் அல்ல. மானுட குலத்தில் நிகழ்ந்த பெரும் ஞானக் கொந்தளிப்புகளில் ஒன்று ஐரோப்பிய மறுமலர்ச்சி. இன்றைய ஐரோப்பா அதன் விளைவே.

ஆனால் ஐரோப்பாவின் வலிமை அதன் முதலீட்டுக்குவிப்பில் உள்ளது. அம்முதலீடு ஆசிய ஆப்ரிக்க நாடுகளை ஒட்டச்சுரண்டி பட்டினிக்கு தள்ளியதன் மூலம் உருவாக்கப்பட்டது. இரண்டாவதாக ஐரோப்பா இன்றும் ஆசிய ஆப்ரிக்க சமூகங்கள் நடுவே சமூக ஐயங்களை உருவாக்கவும்  முரண்பாடுகளை பெருக்கவுமே தன் அறிவுத்திறனில் கணிசமான பகுதியை செலவிடுகிறது. எஞ்சிய உலகின்மீது ஐரோப்பாவுக்கு இருக்கும் காழ்ப்பும் அறியாமையும் அதன் நாகரிக்கத்தின் இருண்ட பக்கங்களே

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,இணையம் படிக்கப்பழகியிருப்பதே  அண்மைக்காலமாகத்தான் என்பதால் இரு கலைஞர்கள் கதையைத்தவற    விட்டிருந்தேன்.அதைப்படிக்க தனது கடிதத்தின் மூலம் அடிஎடுத்துக்கொடுத்த அன்பர் ஜகதிக்கு  நன்றி.எழுபதின் இடைக்காலம் வரை ஜெ.கே என்ற எழுத்தாளுமை மட்டுமே என்னை வெகுவாகப்பாதித்தபடி இருந்திருக்கிறது.பிறகு சுந்தர ராமசாமி ,அஸோகமித்திரன் என்றும் தொடர்ந்து நீங்கள்,எஸ்,ராமகிருஷ்ணன்என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விட்டாலும்,ஜெ.கேயின் மீதான அபிமானம் மெல்லியதொரு மயிலிறகு வருடலாக மனதினுள் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.அதைக்கிளர்த்தி விட்டு ஜெ.கே என்ற மகத்தான மனிதனின் தனிமைத்தவிப்பை மூல விக்கிரகத்தின் தனிமையாக உங்கள் சொற்சித்திரம் எடுத்துக்காட்டி சிலிர்ப்பில் ஆழ்த்திவிட்டது.சொற்களின் பிறாண்டல்ஒரு படைப்பாளியை அலைக்கழித்து ஆட்டுவதை,உறக்கம் துறந்து அழுகை மறந்து அவன் படும் அவதிகளை வார்த்தைகளில் வடிக்க வேறு  எவராலும் இயலாது.அஸோக மித்திரன் பற்றிய தங்கள் பதிவுகள்-குறிப்பாக எழுத்துக்காக மட்டுமே அவர் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்ததை,அதனால் பட நேர்ந்த துன்பங்களையும் கூட இலகுவாக ஏற்றுக்கொண்டதை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

எம்.ஏ.சுசீலா

முந்தைய கட்டுரைராஜ் தாக்கரே
அடுத்த கட்டுரைமின்னஞ்சல்