முழங்கால் புதையும்
வெண்மணல் அலை
கண்களில் மண்ணிறைக்கிறது
ஓசையுடன் புழுதிக்காற்று
அதிசயமாக
ஒரு சுவர் கண்டேன்
உச்சி வெயிலில் தன் நிழல் போர்த்தி
மெளனமாய் நிற்கிறது அது
இளைப்பாற வழிகாணாமல்
ஏமாற்றத்துடன் கால் துவள
மேலும் நடந்தேன்
தூரம் , தூரம் மேலும் தூரம்
இப்போது வெகுதூரத்தில்
சிறு உருவாய் அந்த சுவர்
என் கை அதை மறைக்குமளவுக்கு
நீண்டு கிடக்கிறது அதன் நிழல்
நான் தவறவிட்டு விட்டதாக எண்ணுகிறேன். பதினெட்டு வயது பையனின் உற்சாகத்துடன் நீங்கள் துடுப்பை ஏந்தி நிற்கிறீர்கள். விமானம் முதல் திறத்த வேன் வரையிலான பயண அனுபவங்கள், படகு சவாரி, கங்கைக் கரையில் அமரந்து தந்துவ விவாதம் . ம்.. வெறுமையுணர்வு தோன்றுகிறது.
பல கோணங்களி்லிருந்து எனக்கு நெருக்கடி வந்தது. இருந்தாலும் ஏதாவது மாற்று ஏற்பாட்டுக்குத் தீவிரமாக முயன்று இந்த பயணத்தை சாத்தியமாக்கியிருக்கலாமோ என்று யோசிக்கிறேன்.. அப்படி செய்திருந்தால், அந்த முயற்சி வேறு வேலை தேடலில் போய் முடிந்திருக்கும். என்ன செய்ய..!
ஆனாலும் நான் சோர்வதாக இல்லை. இனிவரும் பயணக்குழுவில் பங்குபெற முயற்சிக்கிறேன். இலக்கியமும் இசையும் மட்டும் ஒரிரவில் எனக்குப் பரிசயமானதா என்ன.? பார்ப்போம்.
அன்புடன்,
வினோத்.