அன்புள்ள ஜெ,
விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பெருமாள் முருகனுக்கான கருத்து சுதந்திரம் வேறு,யாரோ சிலருக்கு ஏதாவது ஒரு மூலையில் தெரியும் படத்தினால் வரும் மனஉளைச்சல் தவிர்க்க விரும்பும் கருத்து சுதந்திரம் வேறு. மேலும் தமிழ் இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு, ஆங்கில இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு. ஆக கருத்து சுதந்திரம் என்பது ஆளுக்காள், இடத்துக்கிடம், எழுத்தாளருக்கு எழுத்தாளர் வேறுபடும். அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கருத்து சுதந்திரம் பற்றி கருத்து சொல்லலாம் என்று யம, நாரத, மனு மற்றும் அம்பேத்கார் ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளதை இந்த இடத்தில் நினைவு கூர்கிறேன்.
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்
அன்புள்ள ஜெமோ,
மலையாளம் கற்பது குறித்து..
இங்கே கொஞ்சம் பாருங்கள்..:-)
http://ilayaraja.forumms.net/t124-learn-malayalam-beyond-basic-reading-lesson-11-some-essential-lists-part-4c-food-eating-some-dishes
ராஜா ரசிகர்கள் வினைல் கவரைப்படிப்பதற்காக கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.!!
அன்புடன்,
ஜெய்கணேஷ்.
ஒங்க ஃபோன் காலர் ட்யூன மாத்துங்க சார்.. அது நாள் முழுக்க வாயில வந்துட்டே இருக்கு.. பெங்களூர்ல எல்லோரும் என்ன லூஸூ மாதிரி பாக்கறாங்க..
பாலா