குகை ஓவியங்கள் -கடிதம்

http://solvanam.com/?p=37871

அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை முக்கியமானதாக எனக்குப் படுகிறது. எல்லாம் பாரத தேசத்தில் இருந்தே துவங்கியது அல்லது அனைத்திற்கும் தாய் நிலம் தமிழகமே என்கிற முழக்கமும் , எல்லாம் ஐரோப்பா வில் இருந்தே துவங்கியது என்கிற சித்தாந்தமும் , இந்தியாவில் உள்ளது வெறும் பெருமிதஉணர்வே , இந்தியர்களின் இந்திய ஆராய்ச்சி biased and un- scientific என்கிற எதிர் நோக்கிற்கும் இடையே ஒரு வாசகன் உண்மையை அறிய கடும் உழைப்பை செலுத்த வேண்டி இருக்கிறது.

இதில் ஸ்ரீ விலி கூட்டத்தில் நீங்கள் வேறு அனைவரும் சாத்தியமான அளவில் வரலாற்றை எழுத வேண்டும் , புனைய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். உண்மை அறிதலில் பளு இன்னமும் கூடும்.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4
அடுத்த கட்டுரைநம்பிக்கை மனுஷிகள்-கடிதம்