அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் அனுப்பி வைத்த கட்டுரை முன்வரைவை வாசித்தேன். அதில் நீங்கள் குறிப்பிடும் அந்த சூழியல் குழுக்கள், நிதி அமைப்புகளில் பல இன்றும் உள்ளன. வேறு வேறு பெயர்களில்.
ஒருபோதும் நம்மால் இந்த அமைப்புகளின் வலைப்பின்னல்களை, அதன் செயல்திட்டங்களை முழுக்க அறிந்து கொள்ள முடியாது. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அமைப்புகள் எவையாக இருக்கலாம், அவை மையத்தில் உள்ள எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புடையவை போன்ற தகவல் சேகரிப்புகள் சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக இந்திய வெளியுறவு, தூதரகத் துறை ஆட்களால்.
இதன் மூலமே “Modern slavery” போன்று தற்காலத்தில் அதிகம் உபயோகிக்கப்படும் propaganda பதங்கள் உருவான விதம், அதற்கு எதிராக கிளம்பி வரும் தன்னார்வ நிறுவனங்கள், பிரச்சார அமைப்புகள் எவை போன்றயையும், தேச பொருளியல் உட்கட்டமைப்பை வலுவற்றதாக ஆக்குவதற்கான முயற்சிகள் எவை என்பதெல்லாம் வெளியே வந்தன.
ஆனால் இவை வெளியே வர ஆரம்பித்தவுடன் மேலும் உஷாராகிவிட்டார்கள். நமக்கு எதுவெல்லாம் ஏற்கனவே தெரியும் என்பதை அறிய சங்கீதா ரிச்சர்ட் போன்ற “asset”களை வைத்து இந்திய தூதரகத்துக்குள்ளே ஊடுருவினார்கள். அதை நாம் நிறைய காலதாமதத்திற்கு பிறகு கண்டுபிடிக்க, நமக்கு தெரிந்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்தவுடன் தேவயானி கோப்ரகடேவை பொதுவில் அவமதித்து, அதை ஒரு பெரிய செய்தியாக்கி, பிறகு அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சங்கீதா ரிச்சர்ட் மற்றும் அவரது குடும்பத்தை exfiltrate செய்தார்கள். இது பலருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.
இன்று ஃபோர்ட், ராக்கபெல்லர் போன்ற ஃபௌண்டேஷன்கள் எல்லாம் “holding company”க்கள் போல தான் செயல்படுகின்றன. அங்கிருந்து நிதி ஐரோப்பிய (குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய) நாடுகளுக்குச் சென்று, இன்னோரு ஃபௌண்டேஷன் முளைத்து, பிறகு அங்கிருந்து பாதி நிதி ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கும், மீதி இந்தியா பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு செல்கிறது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் நிதியில் ஒரு பகுதி கிழக்கத்திய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் ஆவணப்பட இயக்குனர்களுக்கு வருகை பேராசிரியர் ஃபெல்லோஷிப், கருத்தரங்க நிதி, ஆராய்ச்சி நல்கை போன்றவற்றுக்கு செல்கிறது.
இந்த வலைப்பின்னல் குறித்து பல ஆண்டுகளாக தகவல் சேகரித்து, பின்னர் அதை “network analysis” போன்ற கணினி–சமூகவியல் முறைமைகளை வைத்து புரிந்து கொள்ளும் முயற்சி ஒன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. (உதாரணமாக, இது போல் https://www.recordedfuture.com/aqap-leadership-social-network/) . அது எந்த அளவு வெற்றி அடைந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இவை மாறிக் கொண்டே இருக்கும் வலைப்பின்னல்கள்.
ஆனால் இந்த முயற்சியில் ஈடுபட்டதனாலேயே சில தகவல்களை இவர்களால் திரட்ட முடிந்திருக்கிறது. அதிலிருந்து அடுத்த கட்டமாக FCRA Wing [Foreign Contribution Regulation Act] சேகரித்திருக்கும் தரவுகள் மற்றும் FC-returnகளோடு இணைத்து ஒப்பிட முடிந்தால் நிதிவலைகள் குறித்த குறைந்தபட்சம் புரிதல் ஒன்றாவது கிடைக்கும். இது நீங்கள் கட்டுரை வெளியிடப்போகும் 27ஆம் தேதிக்கு முன் முடிகிற காரியம் இல்லை. சொல்லப்போனால் எப்போது முடியும் (முடிந்தாலும் பொதுவில் வைத்து விவாதிக்க படுமா) என்பதெல்லாம் இன்னும் சரிவர தெரியவில்லை.
இப்போதைக்கு நீங்கள் ஒன்று செய்யலாம். இந்திய தன்னார்வ நிறுவனங்களுக்கு ஃபோர்ட் பௌண்டேஷன் போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிதி அளிக்கின்றன என்ற செய்தியை கூட நம்மாட்கள் நிறைய பேர் நம்ப மாட்டேன் என்கிறார்கள். அதையே யூகம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். FCRA தளத்திலேயே மாநில வாரியாக, வருட வாரியாக ஒவ்வோரு தன்னார்வ நிறுவனத்துக்கும் எங்கிருந்து எவ்வளவு அன்னியநிதி வந்தது போன்ற விஷயங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் இணைப்பு அளிக்கலாம். அந்த தளத்தில் உள்ளவை self-disclosureகள் தான் என்ற போதிலும், இவை முக்கியமான தரவுகள்.
குறைந்தபட்சம் வருடாவருடம் இத்தனை நிறுவனங்களுக்கு இவ்வளவு அந்நியநிதி ஏன் போகிறது என்ற கேள்வியாவது இதை பார்த்தபிறகு நம்மாட்களுக்கு எழும்.
அன்புடன்
A
சுட்டிகள்
http://fcraonline.nic.in/fc3_amount.aspx
உதாரணமாக:
India Foundation for the Arts, Bangalore:
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2006-2007
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2007-2008
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2008-2009
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2009-2010
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2010-2011
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=094420786R&by=2011-2012
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=075900809R&by=2006-2007
National Folklore Support Center, Chennai:
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=075900809R&by=2006-2007
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=075900809R&by=2007-2008
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=075900809R&by=2008-2009
http://fcraonline.nic.in/fc3_verify.aspx?RCN=075900809R&by=2012-2013
FCRA தரவுகளை வைத்து இந்த இணையதளங்களில் சில கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன:
http://sighbaboo.blogspot.in/2014/05/country-specific-state-wise-fund-flows.html
http://sighbaboo.blogspot.in/2014/04/state-specific-top-20-organizations.html
http://www.indiandefencereview.com/news/foreign-funding-of-indian-ngos/0/
தன்னார்வ நிறுவனங்களுக்கு FCRA அனுமதி பெற்று தருவதற்கே ஏராளமான நிறுவனங்கள் உருவாகி விட்டன:
http://fcraregistration.com/fcraform/FCRAregd.pdf
இந்தியாவில் தன்னார்வ நிறுவனங்களின் பெருக்கமும், மாற்றமும்:
http://theopendata.com/site/2013/02/trends-in-registration-of-non-profit-institutions-in-india/
https://docs.google.com/file/d/0B9w08mnxUvF9NDViM2I2YTctODNjMy00YTJmLTg1MDQtZWZiZGE1NDFmNGMz/edit?pli=1
“Before the 1970s, the claimed purpose of most societies was ‘religion’ (35 percent) but this has declined substantially over the past few decades and today, majority of the societies are registered with a ‘social service’ purpose. There’s also interesting data on the distribution of governing board members and the report notes, “In both rural and urban areas, the number of male governing body members is significantly higher than their female counterpart. The average size of governing body per society is the same i.e. 10 persons, for both rural and urban areas. The overall male-female ratio of governing body members is 3:1. The male-female ratio is almost same in rural and urban areas.” Note: the employment and financial results are based on a survey which could potentially be biased (as only a small subset of the sample was visited and I couldn’t discern if this was a random sample or not).”
*
அன்புள்ள A
இவ்வமைப்புக்கள் தாங்களே முன்வைத்த கணக்குகள் இவை. கொடிகள் புரண்டிருக்கின்றன. அப்படி என்ன கலாச்சாரப் பெரும்புரட்சியை, மக்கள் சேவை பெருக்கத்தை இந்தக்கோடிகளைக்கொண்டு இவர்கள் செய்தார்கள் என்று நடுநிலைமனம் உடைய சிலரேனும் புரிந்துகொள்ளட்டும்
பொதுவாக ‘எல்லாமே வெளிப்படையானவை’ என்று இதன் ஆதரவாளர்கள் ஊடகங்களில் சொல்கிறார்கள். ஆனால் மிக எளிய தகவல்களைக்கூட நாம் அறிய முடியவில்லை. அவர்களே சட்டபூர்வமாக ஒரு அறிவிப்பை அளிக்கிறார்கள், அதற்கு அப்பால் ஒரு வரிகூட கிடைக்காது.
தகவலறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்டபோதுகூட பெரும்பாலும் தகவல்களாக எதுவும் கிடைக்கவில்லை என்பதே நடைமுறை உண்மை. ஆனால் ஒவ்வொரு அதிகாரிக்கும் பெரிதாக ஏதோ சொல்வதற்கு இருக்கிறது
இந்தியாவின் நவீன ஜனநாயக சிந்தனையில் இன்று நிதிபெறாதவர்களின் பங்களிப்புதான் உண்மையில் என்ன என்று தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது
ஜெ
பிகு
இவ்விணைப்புகளைக் கொண்டு [ஒரு வழிமுறைக்காகவே இவை சுட்டப்பட்டிருக்கின்றன. இணையத்தில் ஆராயத் தெரிந்தவர் சிலநூறு இணைப்புகளை எடுக்கமுடியும்] ஓர் ஆய்வை உண்மையான ஆர்வமுள்ளவர்கள் தொடங்கலாம். எவரெவர் நிதிபெற்றிருக்கிறார்கள், என்ன தலைப்புக்காக நிதி பெற்றிருக்கிறார்கள், அந்த தலைப்புகள் எந்தெந்த ஒட்டுமொத்த ஆய்வுத்திட்டத்தின் பகுதிகள் என இணைத்துப்பார்க்கவேண்டும். அதோடு இதேபோல கீழைநாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் அளிக்கப்பட்ட நிதிக்கொடைகளின் வரலாற்றையும் ஆராயவேண்டும். மெல்ல மெல்ல ஒரு சித்திரம் துலங்கி வரும்.
இன்றுவரை இந்திய தன்னார்வக்குழுக்கள், கலாச்சார நிறுவ்னங்களுக்கு கிடைத்துள்ள நிதியைப்பற்றிய பேச்சே உள்ளது. அவை பல்வேறு வழிகளில் இங்குள்ள அரசியல் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்களுக்குச் சென்று சேர்ந்த விதம் பற்றி எழுதப்படவே இல்லை.அவை நம் சிந்தனையில் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கின என்பது பேசப்படவில்லை.
ஆனால் அது ஒருவரால் செய்யக்கூடிய பணி அல்ல. ஒரு பெருங்குழு போதிய நிதிப்பின்புலத்துடன் செய்யவேண்டியது. அரசியல்சித்தாந்தத்தில் முனைவர் பட்ட ஆய்வேடுகளைச் செய்பவர்கள் செய்யலாம் — ஆனால் இந்தியாவிலுள்ள எந்தப்பல்கலையிலும் அதற்கு நிதியோ முனைவர்பட்டமோ அளிக்கப்படாது. அத்தனை பல்கலைகழகங்களும் நிதியுதவி அறிவுஜீவிகளின் பிடியில் இருக்க்கின்றன
குறைந்தபட்சம் இந்தியாவின் ஏதேனும் ஒரு செய்த்தாளில் அல்லது இதழில் இதைப்பற்றி ஒரு கட்டுரையேனும் வரவழைக்கலாமென முனைந்தபோதுதான் அதுவும் இந்தியாவில் சாத்தியமே இல்லை என தெரிந்தது. அத்தனை ஊடகங்களிலும் நிதிவலையில் இருப்பவர் சிலர் இருக்கிறார்கள். பதினொரு முயற்சிகள். அதன்பின் விட்டுவிட்டேன். நடுநிலையாளர்கள் கவனியுங்கள் எந்தச்செய்தித்தாளாவது எதையாவது இதுவரை எழுதியிருக்கிறதா என்று.
இன்றைக்கு இணையதளத்தில் எழுதுவதைத்தவிர வேறு வழியே இல்லை. என்றாவது இதெல்லாம் ஆராய்ச்சிக்கு உள்ளாகலாம். உண்மையை கண்டறிவது சாத்தியமாகலாம்.
ஜெ
குறிப்பிடப்படும் கட்டுரைகள்
பழைய கட்டுரைகள்
போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்
சிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை
[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]