இது போன்ற உள்ளூர் விடயங்கள் எனக்கு கொஞ்சமும் தெரியாதவை. சும்மா ஒரு யூகத்தில் தேடிக்கண்டுபிடித்தது. இதில் பெருமாள் முருகனின் பெயரும், திருச்செங்கோடு,மற்றும் நிதிவிபரமும் இருக்கிறது.
மேல் விபரங்கள் இந்த தளத்தில் கிடைக்கும் ஆண்டு அறிக்கையில் இருக்கக்கூடும்.
வேணு
சார் ,
விமர்சனத்திற்கும் கேவலப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு . நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நக்கீரன் வகையறாவை ஆதரிக்கிறீர்கள்.
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள வேணு, ராதா
சமகாலப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லக்கூடாது என்றிருப்பது இதனால்தான். ஜனநாயகம் பேணிப்பேணி என் தளமே நிறைந்துவிடுகிறது
ஆளைவிடுங்கள்
ஜெ