மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன
டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க
ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே எனது வேலை’ என்று இவர் எழுபதுகளில் அறிவித்தது நவீனத்துவத்தின் ஒரு பிரகடனம் என்றே சொல்லலாம்.
சா.கந்தசாமி நடை, கசடதபற போன்ற சிற்றிதழ்களுடன் தொடர்புடையவர். இவரது ‘சாயாவனம்’ ‘அவன் ஆனது’ ‘ ‘சூரியவம்சம்’ ‘தொலைந்துபோனவர்க்ள்’ ஆகிய நாவல்கள் தமிழில் பெரிதும் விவாதிக்கப்பட்டவை. மிகக்குறைவான சொற்களில் உணர்ச்சிகள் கலவாமல் அறிக்கையிடும் தொனியில் வாழ்க்கையின் தருணங்களை மட்டுமே சொல்லிச்செல்லும் படைப்புகள் அவை
கந்தசாமியின் கதைகள் வாசிக்க
சா.கந்தசாமியின் கதைகளை வாசிக்க
கந்தசாமியின் கதைகளைப்பற்றி இமையம்
தமிழ் நவீனத்துவத்திற்கு நேர் எதிராக உணர்ச்சிவேகத்துடனும் பிரச்சார நோக்கத்துடனும் கட்டற்ற சொல்லாட்சிகளுடனும் வெளிப்பட்ட கவிதை இயக்கம் வானம்பாடி. அதன் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான புவியரசு ஞானகூத்தனுக்கு நேர் எதிரான பார்வைகொண்டவர், நண்பர். புவியரசின் கவிதைகள் சொல்விளையாட்டுகளும் விமர்சனங்களும் அங்கதமும் கொண்டவை
தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமஸோவ் சகோதரர்கள்’ என்னும் மாபெரும் நாவலை அவர் மொழியாக்கம் செய்திருப்பது தமிழ் சூழலில் ஒரு பெரும் சாதனை
வசந்தபாலன் தமிழில் ஐந்து படங்களையே இயக்க முடிந்திருக்கிறது. ஆனால் தான் தேர்ந்துகொண்ட பாதையிலேயே துணிந்து முன்செல்லும் தீவிரம் அவரை முக்கியமான திரைப்படைப்பாளியாக தமிழில் நிலை நிறுத்தியிருக்கிறது. பரவலாக பார்க்கப்படாத அபூர்வமான வாழ்க்கைச்சூழல்களை நோக்கிச் செல்லும் தனித்த நோக்கே அவரது சாதனை எனலாம்
பாவண்ணன் வண்ணதாசன் நாஞ்சில்நாடன் தலைமுறைக்குப்பின் தமிழில் எழுதவந்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். யதார்த்தவாதப் படைப்புகளை எழுதுபவர் என அறியப்பட்டவர். பாண்டிச்சேரி அருகே வளவனூர் என்னும் ஊரைச்சேர்ந்தவர். தமிழில் அதிகம் பேசப்படாத சூழலை இலக்கியத்திற்குள் கொண்டுவந்து கவனிக்கப்பட்டவர். 1986ல் வெளிவந்த முள் என்னும் சிறுகதைத் தொகுதி அவரை பரவலாக விவாதிக்கப்படச் செய்தது. பாய்மரக்கப்பல் என்ற நாவல் முக்கியமானது
கன்னடத்தில் இருந்து பல முக்கியமான ஆக்கங்களை தமிழுக்குக் கொண்டுவந்த பாவண்ணனின் மொழியாக்கச் சாதனை என்ரு எஸ்.எல்.பைரப்பாவின் ‘பர்வ’ நாவலைச் சொல்லலாம்
வாசிக்க : பாவண்ணன் பேட்டிகள்
தமிழின் புதியதலைமுறைக் கவிஞர்களில் தன் அங்கதம் மூலமும் எளிய மொழியின் கூர்மை மூலமும் பெரிதும் ரசிக்கப்படுபவர் இசை. ஞானக்கூத்தனின் தொடர்ச்சி என பலவகையிலும் சொல்லப்படக்கூடிய இசை கவிதைகள் முன்னோடியில் உள்ள கசப்பும் விமர்சனமும் இல்லாமல் அன்பின் குரலாக ஒலிப்பவை.
அறிவிப்பு
27 காலை பத்து மணிமுதல் இருநாட்களும் அரங்கில் எழுத்தாளர்களை தனிப்பட்டமுறையில் சந்தித்து உரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், பாவண்ணன், டி.பி.ராஜீவன், புவியரசு, சா.கந்தசாமி, நாஞ்சில்நாடன் மற்றும் ஞானக்கூத்தன் ஆகியோருடனான வாசகர் சந்திப்புகள் நிகழும்
இடம் ராஜஸ்தானி நிவாஸ்
Rajasthani Nivas
33, Periaswamy Road East,
R.S.Puram,
Coimbatore – 641 002
Phone : 91 – 422 – 2548581