அன்பு ஜெ:
உங்கள் எழுத்தில் கட்சி சாரா சுயம், நேர்மை, துணிவு எல்லாமே இருக்கின்றன. உங்களுடை அலசல்கள் போலித்தனமாக இல்லாமல், அசலாக இருக்கின்றன. ஹிட்லரைப் பற்றிய கட்டுரை, திராவிட இயக்கத் தலைவர்களின் தொடக்ககாலம் முதல், தற்போது வரையிலான செயல்முறைகளின் பின்புலத்தை அடிக்கோடிடுகின்றன. சமயமாகட்டும், இலக்கியமாகட்டும், அரசியல் அவலமாகட்டும், உங்களின் திறந்த மனத் திறனாய்வுகள், உங்கள மனதளவில் நடுவகலாத, ஏற்கனவே இருக்கக்கூடிய சிந்தனைகளின் பாதிப்போ, பதிப்போ இல்லாத உண்மையான, அறிவார்ந்த தேடலை வெளிப்படுத்துகின்றன. உங்களைப் போன்றவர்கள், பாரதத்தின் ஞானத்தேடல் பரம்பரையின் ஊற்றுக்கண்கள், பெருமைக்கொள்ளத்தக்க தொடர்வுகள். வாழ்த்துக்கள்!
அசோகன் சுப்பிரமணியம்
***
ஞாநிபற்றிய உங்கள் மதிப்பீடு மிகத்துல்லியமானது.அவரது அந்தரங்க சுத்தியும் ,மெய்யான சமூக அக்கறையும் சந்தேகங்களுக்குஅப்பாற்பட்டது.
***
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இதழில் கட்டுரைகள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன. ஒரு புதிய வாசலை திறந்து காடுகின்றன. ஆனால் இப்போது இலக்கியக் கட்டுரைகளும் நகைச்சுவைக் கட்டுரைகளும் மிகவும் குறைந்துவிட்டன என்பதை சுட்டிக்காட விரும்புகிறேன். அரசியல் கட்டுரைகளை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால் நாம் இப்போது வாசிப்பதில் 90 சதவீதமும் அரசியலும் சினிமாவும்தான். உங்கள் இதழ் போல சில இடங்களில்தான் இலக்கியம் ஆன்மீகம் போன்றவற்றுக்கு இடம் இருக்கிறது.
ஞாநியைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை மிகவும் நல்லது. அவருக்கு பரவலான வாசிப்பு இருப்பதனால் அவரை உடனே குறை சொல்லக்கூடியவர்களே அதிகம். அதைவிட அவருடன் முரண்படும்போது உடனே அவரை வெறுப்பது திட்டுவது போன்றவற்றை நாம் காணலாம். வெறுக்காமல் சர்ச்சை செய்ய நமக்கு இன்னும் பழக்கம் ஆகவில்லை. உங்கள் கட்டுரையை அதனால் நான் ரசித்தேன்
சுப்ரமணியம் ஆறுமுகம்