நாஞ்சில்நாடனின் புதிய கும்பமுனிச் சிறுகதை. டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும்
அவரது இணையதளத்தில்
வழக்கம்போல மையமில்லாமல் தாவிச்செல்லும் விளையாட்டு. கதையைப்பற்றியே கதை. உள்பாய்ச்சல்கள்.நக்கல்கள். நேராக பழைமையை செவ்வியலை முற்போக்கை எல்லாம் குத்திச்செல்லும் சொல்விளையாட்டுக்கள்
அவரது சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி மட்டும் பிழைதிருத்துநரால் சுழல் நாற்காலியாக ‘மேம்படுத்தப்பட்டிருக்கிறது’. சூரல் என்றால் பிரம்பு. கும்பமுனி கட்டை ஏறும்போது கூடவே சிலபல ஆயிரம் சொற்களும் எரியும்போலும்