நஞ்சுபுரம்

இன்று காலை தினமணியில் நஞ்சுபுரம் என்ற திரைப்படத்தைப்பற்றிய தகவல் ஒன்று வந்ததுமே தனி ஆர்வத்துடன் அதைக் கவனித்தேன். என் நண்பரும் தொலைக்காட்சி தொடர் இயக்குநருமான சார்லஸ் இயக்கியபடம் அது. அது வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட படமல்ல. நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆளுக்கு பங்குபோட்டு எடுத்த படம். ஆனால் நிறையவே பணம் செலவாகிவிட்டது, காரணம் இயக்குநர் சிறந்த விளைவை எதிர்பார்க்கிறவர்.

நஞ்சுபுரம் பாம்புகளைப் பற்றிய ஒரு திரில்லர் என்றார் சார்லஸ். நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. சரியான தொழில்நுட்பப் பயிற்சியுடன் எடுக்கப்படும் திரில்லர்களுக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. நண்பரின் முயற்சி வெற்றிபெறவேண்டுமென வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லா துணிச்சலான சிறிய முயற்சிகளும் வரவேற்கத்தக்கவையே.

நஞ்சுபுரம் பாடல்  http://www.youtube.com/watch_private?v=cEfLEVAwxfE&sharing_token=h19AVGLFC7UgGK5f67LntAநஞ்சுபுரம் முன்னோட்டம் http://www.youtube.com/watch?v=jAuIEWbwtbM

http://www.youtube.com/watch?v=0Cp0Pqh5eko

முந்தைய கட்டுரைஉ.ரா.வரதராஜன்
அடுத்த கட்டுரைஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்