ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது

Nanjundan (4)

நண்பர்களே

2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 ஞாயிறு அன்று கோவை நானி கலையரங்கு – மணி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5.30 க்கு விழா நிகழும். 27 சனிக்கிழமை முதல் கருத்தரங்குகள், சந்திப்புகள் என ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் .இடம் பங்கேற்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்

கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். மபொசியின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்.

எழுபதுகளில் வெளிவந்த இவரது அன்றுவேறு கிழமை என்ற கவிதைத்தொகுதி ஒரு பெரிய அலையை கிளப்பியது. கூரிய அங்கதக் கவிதைகள் மூலம் தமிழ்க்கவிதையில் புதியபாதையை திறந்தார்.

ஞானக்கூத்தனை கௌரவிப்பதன் மூலம் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பெருமிதம் கொள்கிறது

ஞானக்கூத்தன் இணையதளம்

ஞானக்கூத்தன் அழியாச்சுடர்களில்

ஞானக்கூத்தன் – தமிழ்ப்படைப்பாளிகள் தளம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27