நண்பர்களுக்கு,
வெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்
முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
மழைப்பாடல் ரூ 840
வண்ணக்கடல் ரூ 800
நீலம் ரூ 500
இவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். மழைபபடல் 1300 ரூபாய். வண்ணக்கடல் 1200 ரூபாய். நீலம் செம்பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
செம்பதிப்பு முன்பதிவுசெய்தவர்களுக்கு பிரதிகளை நான் கையெழுத்திட்டு வழங்கவேண்டும். நூல் இன்றுதான் அச்சில் இருந்து வந்துள்ளது. நான் கையெழுத்திடமுடியாத அளவுக்கு வேலைகள். 10 அன்று கையெழுத்திடுவேன். 11 அன்று தபாலில் அனுப்பப்பட்டுவிடும்.
ஜெ