விழா-பாவண்ணன் வாழ்த்து

index

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நலம்தானே?

வெண்முரசு நூல்வரிசை வெளியீட்டு நிகழ்ச்சி பற்றிய செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள நான்கு தொகுதிகளுமே, ஏற்கனவே நீங்கள் சொல்லியிருந்தபடி தனித்தனியாகப் படிக்கத்தக்க விதத்தில் ஒரு சின்ன மையத்தைச் சுற்றி அமைந்திருப்பதும், பெருந்தொடரின் இணைப்புக்கண்ணிகளாகவும் கச்சிதமாக விளங்குகின்றன. வற்றாத உங்கள் ஊக்கம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழுக்கு இது நிச்சயம் பெருங்கொடையாக விளங்கப்போகிறது. உலக அளவில் தமிழுக்கு இது ஓர் அரிய இடத்தைத் தேடித் தரும் என்பது உறுதி. கூர்மையும் அழுத்தமும் கூடிய உரையாடல்களும் ஆழமும் விரிவும் கொண்ட சித்தரிப்பும் மாறிமாறி நாவல் தொகுதிகள் முழுக்க வந்தபடியே இருக்கின்றன. படித்தல் என்பது ஓர் இனிய அனுபவமாக மாறும் ரசவாதத்தை எந்த ஒரு புதிய வாசகனாலும் உணரமுடியும்படி ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்துள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துகள் ஜெயமோகன். இந்த வரிசையும் சரி, இதன் வெளியீடும் சரி, எந்தக் கட்டத்திலும் நின்றுவிடக்கூடாது. இறையருள் உங்களுடன் எப்போதும் இருந்து வற்றாத ஊக்கத்தை அருளட்டும்.

அன்புடனும் வாழ்த்துகளுடனும்

பாவண்ணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா ஏன்?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17