மழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன் தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும் மிகுந்த மன எழுச்சியைத்தர நாம் நாவலுக்குள் பிரவேசிக்கிறோம்
மழைப்பாடலின் மழைபற்றிய ஒரு பார்வை. மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம் ‘மழை இசையும் மழை ஓவியமும்’ அவரது இணையதளத்தில் வெளிவரும் தொடரின் முதல் பகுதி
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்