தென்னகசித்திரங்கள்

city4
ஜெ,

வெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைப்பாடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக வந்திருந்தது

ஆனால் மகாபாரதம் நடக்காத இடங்களான தென்னாடு, வேசரநாடு கலிங்கநாடு போன்றவற்றையும் ஆசுரம் போன்ற  நிலப்பரப்பையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காட்டியது வண்ணக்கடல்

இந்த வேறுபாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா

செந்தில்

prince_of_persia_by_nuro_art-d4fo248

அன்புள்ள செந்தில்

ஆம்.

பாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த பாரதம் பற்றியும் குறிப்புகள் உ:ள்ளன. ஆனால் அவற்றை ‘நேர்க்காட்சியாக’ காட்ட இடமே இல்லை. கதை சூடுபிடித்தபிறகு சொல்லமுடியாது. சகதேவனின் படையெடுப்பிலேதான் அதன்பின் தென்னகம் வருகிறது. அர்ஜுஜனின் அஸ்வமேதத்தில் வடகிழக்கு வருகிறது. பாரதப்போர் முடிந்ததும் மகாபாரதம் முடியும் மனநிலை வந்துவிடும். அதன்பின் இந்தியவர்ணனை சாத்தியமல்ல.

ஆனால் அதையெல்லாம் சொல்லாமல் நாவலை எழுதவும் முடியாது. ஏனென்றால் அது வியாசன் சொன்னது. அதோடு அந்தப்பகுதிகளை எல்லாம் இப்போதே சொல்லாவிட்டால் பிறகு அவை குறிப்பிடப்படும்போது அவை கண்ணில் விரியாது. ஆகவேதான் வண்ணக்கடல் இந்தியாவின் தெற்கே ஆரம்பித்தது

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2
அடுத்த கட்டுரையாருடைய ரத்தம்?