ஜெயதேவ மானசம்

ஜெ

நேற்று இரவு உங்கள் கீத கோவிந்த இணைப்புகளைப் பார்த்தேன். அப்படியே இணையத்தில் உலவி கீதகோவிந்தம் சினிமாப்பாடல், நடனம் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை ஐந்துமணிக்கு இதை எழுதுகிறேன்.

eternal emotions என்று சொல்லலாம். அது மனிதனிலே நிகழ்கிறது. ஆனால் தெய்வங்களுக்குரியது என்று உங்கள் மொழியில் சொல்லலாம். காதல் பிரிவு. அதிலும் அந்தப்பெரியவர் ஆடும்போது மனிதனாகவே தெரியவில்லை

பிரபு

அன்புள்ள பிரபு,

நான் கடந்த நாற்பதுநாட்களாகவே கீதகோவிந்தத்தில்தான் இருக்கிறேன். கொஞ்சம் மீண்டு வந்து மீண்டும் குப்புற விழுந்தேன். நேற்று மாலை முதல் இதோ காலை ஆறுமணிவரை கீதகோவிந்தம்.

அந்தப்பெரியவர் பெயர் கேளுசரண் மகாபாத்ரா. அஷ்டபதியில் இருவர்தான் பிதாமகர்கள். சோபான சங்கீதப் பாடகரான ஞெரளத்து ராமப்பொதுவாள். ஒடிசி நடனக்கலைஞராகிய கேளுசரண் மகாபாத்ரா.

இருவரையும் சந்தித்து கால்தொட்டு வணங்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு. அன்று நெகிழ்ந்ததை விட பலமடங்கு இப்போது நெகிழ்கிறேன். அவர்கள் அடைந்த அந்த உச்சத்தில் நின்றுகொண்டு அருகே அவர்களைப் பார்க்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைநிகர்தெய்வம்
அடுத்த கட்டுரைவெண்முரசு விவாதங்கள் இணையதளம்