ஒரு முறை கரூரில் சித்தி வீட்டில் தங்கி இருந்தேன். சித்தியின் மாமியார் தீவிரப் பகுத்தறிவுவாதி பரபரப்பாக அன்று நக்கீரன் இதழில் வெளிவந்திருந்த தொடரின் ஒரு பகுதியைக் காட்டினார்.
அக்னிஹோத்ரம் எதோ ஒரு ஆச்சாரியர் எழுதிய ஹிந்துமதம் எங்கே செல்கிறது எனும் தொடரில் வேதங்களில் வரும் அஸ்வமேதம் அதன் சடங்குகள் குறித்த பகுதி.
முகத்தில் ‘’பாத்தேளா! அவாளே ஒத்துனுட்டா. அவாள்லாம் அக்யூஸ்ட்தான்’’ எனும் பாவனை. நான் புன்னகையுடன் சொன்னேன் ‘’பாட்டி எந்தக் காரணமும் இல்லாமல் மனித மனத்தால் பிற மனிதனை வெறுக்க முடியாது. மனிதன் தனது கூட்டு நனவிலியால், உயிரியல் இயல்பால் கூடி வாழும் இயல்பினன். நீங்கள் இத்தனை காலம் வாழ்ந்த இயற்கைக்குப் புறம்பான நிலையை, அதன் விளைவான குற்ற உணர்வை இந்தக் காகிதத் தகவல் சமன் செய்துவிடும் என்றா எண்ணுகிறீர்கள்?’’ என்றேன்.