விசிஷ்டாத்வைதம்:கடிதங்கள்

ஜெயமோஹன் மாமா!

கலக்கிட்டேள்! படீச்சுட்டூ வயரு குலுங்கொ குலுங்கொ ஷிரிச்சிண்ட்ரூக்கேன். ஷொன்னேள் பாத்தேளா – விஷிஸ்டாத்வைதம், வைஷ்ணவம், ஷங்க்கரன் – அப்படீன்னுட்டூ.. அதுபத்யெல்லாம் நேக்கு அவ்ளவு `ஸாரி’யில்லே – உம்மோட ரைட்டிங்க்ஸ் படிச்சப்றம்தான் கொஞ்ச்சம் ப்ரயத்ஸம் வந்திண்டிருக்கு – அதெல்லாம் பத்தி வா(ச்)சிக்ரதுக்கு!

பாத்து ஓய்! தி.மு.க தொண்டர்வாள், ஸினிமாக்காரா, கிறிஸ்துக்காரா, ஆர்.எஸ்.எஸ் காரா – அத்னை பேத்தையும் கூஸாம கோட்டா பண்ணிண்ட்ருக்கேள். ஸீக்ரம் எதாவது ப்ராது வராமப் பாத்(து)க்கோங்கோ!

எழுதிண்டேயிருங்கோ – வாஸிச்சுண்டேயிருக்கோம். காடு ரேசாலம் மாமாவோ, வரதாச்சாரியார் மாமாவோ – நன்னா அப்யர்த்தம் பண்றேள். சொஸ்தாயிண்ட்ருக்கோம்!

அடியேன் உத்ரவு,

சரவணன்V. Saravanan”

பி.கு: முதல் கடிதம். பிடித்த எழுத்தாளர். ஆனால் நகைச்சுவை, அன்பை மீறிவிட்டது :-) தொடர்ந்து எழுதுவேன்…

***************

ஜெயமோகன்

விசிஷ்டாத்வைதம் அருமை. சமீபத்தில் இப்படிப்பட்ட ஒரு நக்கலைப் படித்ததில்லை. வைணவமொழியும் கிட்டத்தட்ட நன்றாகவே உள்ளது. பல கிண்டல்களை வைணவர்கள் மட்டுமே ரசிக்க முடியும். ‘சங்கரனை வெய்யாம எப்டிரா விசிஷ்டாத்வைதத்தப்பத்தி பேச ஆரமிக்கிறது?’ தான் உச்சகட்ட வரி.  அதேபோல ‘சங்கரோ நரகாய ஏவ…’என்ற கீதைவரிக்கான ‘வைணவ’  விளக்கம். அப்படி பல வரிகள். எதைச்சொல்ல? ‘யாராவது டிரை பண்ணியிருக்காளா?’என்று கேட்கும் ரங்குமாமாவின் சீடனின் அறிவியல் தாகம் அபாரம். கதையைச் சொல்லும் போக்கில் வரும் மொழி ஜாலங்கள். மொழி அப்டியே பராக்கு பார்ப்பது போன்ற அனுபவம். குடுமிக்கு கீழே நடந்துசெல்லும் வரதாச்சாரியார், பாறைமேல் ஏணி சாத்தி வைத்தது போன்ற நாமம், ஏழெட்டு அய்யங்கார்களை குவித்து வைத்தது போன்ற ஜீயர்…நடுவே ஒரு வட்டிகக்டை ஆசாமி. ஒரு காதல்.. பின்னிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

ரமேஷ் வரதன்
சென்னை

முந்தைய கட்டுரைதாமஸ் சில வம்புக்கேள்விகள்
அடுத்த கட்டுரைமாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி