இன்று ஜல்லிக்காட்டு வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பை படித்தேன் , மிக அரிதாகவே நமது நீதித்துறையில் இதுபோல பரிசீலிக்கப் படுகிறது . பொதுவாக ஒரு சட்டப்பிரிவும் அதன் விளக்க முறையும் அதன் பொருத்தப்பாடும் மட்டுமே நமது நீதித்துறையில் பேசப்படும் (interpretation and application) . பிற துறைகளில் என்ன நடக்கிறது எனபதே நீதித் துறைக்கு (நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ) தெரியாது.
வரலாறு , பண்பாடு சிந்தனை போன்றவை நீதித்துறையில் அதிகம் பேசப்படும் விஷயங்கள் அல்ல. ஆனால் இவ்வழக்கு விதிவிலக்கானதாக நான் கருதுகிறேன் , மனித மைய்ய (anthropocentric) சிந்தனையில் இருந்து இயற்கை மைய்ய சிந்தனைக்கு (eco-centric) உலகம் நகர்வதை நீதிபதிகள் அறிந்துள்ளனர், கூடுதலாக நமது மரபான சிந்தனையையும் அறிந்துள்ளனர். இத்தீர்ப்பின் சில பகுதிகளை கீழே கொடுத்துள்ளேன்.
இவ்வழக்கில் உணவுக்காக விலங்குகள் கொல்லப் படுவதையும் பரிசீலித்துள்ளனர். இத்தீர்ப்பின் மூலம் எங்கள் துறையும் ஒரு அறிவியக்கத்தின் வாயில் அருகே வந்துள்ளது .
கிருஷ்ணன்