ஒரு புகைப்படம்

தளவாய் சுந்தரம் குமுதத்தில் உதவி ஆசிரியர். நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தளவாயின் இணையப்பக்கத்தைப் பார்த்தபோது இந்த குறிப்பு கிடைத்தது. சி.எல்.எஸ் நடத்திய ஓர் எழுத்தாளர் மாநாடு புகைப்படம் அபூவமானது.

இந்தப்புகைப்படத்தில் தளவாய் அடையாளம் காட்டியிருப்பவர்களை விட்டால் நான் அடையாளம் காணாக்கூடியவராக சி.சு.செல்லப்பா இருக்கிறார். சிவராம காரந்துக்கு நேர் பின்னால்.

இந்த எழுத்தாளர் மாநாட்டைப்பற்றி சுந்தர ராமசாமி அவரது பல குறிப்புகளில் சொல்லியிருக்கிறார்.

இத்தகைய புகைப்படங்களை சேகரிக்க ஓர் ஆவண இணையதளத்தை எவரேனும் உருவாக்கி நடத்தினால் நல்லது. பல எழுத்தாளர்களிடம் அபூர்வமான புகைப்படங்கள் பல உள்ளன. அவற்றில் சுந்தர ராமசாமி போன்றவர்களின் புகைப்படங்கள் பாதுகாக்கப்படலாம். மற்றவை காலப்போக்கில் அழிந்து போகும். அவை சென்ற காலகட்டத்தின் அபூர்வமான நினைவுகள்

http://dhalavaisundaram.blogspot.com/2008/11/blog-post.html 

முந்தைய கட்டுரைதேடுபவர்கள்
அடுத்த கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 3