கமலும் ஜீயரும்

அன்புள்ள ஜெமோ

குமுதம் பேட்டியில் நீங்கள் கமலஹாசனின் நாத்திகமும் உங்கள் ஆத்திகமும் ஒன்றுதான் என்று சொல்லியிருந்தீர்கள்.

கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் நான்குநேரில் ஜீயர் அருகே பவ்யமாக அமர்ந்திருப்பது அந்த நாத்திகர் கமலஹாசன் தான் .

உங்கள் ஆத்திகமும் இதுதானா?

‘தழல்’ முடியரசன்
BwTvHbxCIAABEtw

அன்புள்ள தழல்,

படத்தை இன்னொரு முறை பாருங்கள். கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார். விபூதி அல்ல மேக்கப். பாபநாசம் படத்தில் வரும் சுயம்புலிங்கத்தின் தோற்றம்

வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நானும் அங்கிருந்தேன். அது நான் எழுதும் படம். தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். நான்குநேரி வானமாமலை ஆலயத்தில் வெளிப்பிராகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகவே அங்கே படப்பிடிப்பு நடத்த கோரினோம். ஜீயர் அவர்கள் அனுமதி அளித்தார்

அங்கே படப்பிடிப்பு நடந்தபோது ஜீயரைச் சென்று சந்தித்து மரியாதை செலுத்தினார் கமல். அந்தப்படம்தான் அது. நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என நான் நினைக்கவில்லை. நீங்கள் ஏன் நினைக்கவேண்டுமென புரியவில்லை.

முன்பு ஒரு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் காண ஈவேரா சென்றிருந்தார். திரும்பும்போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டார். படம் கூட வெளியாகியிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவுடையவர்களுக்கு மட்டும்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14