அன்புள்ள ஜெமோ
கண்ணனைப் பற்றி உருகி உருகி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்
ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப் பார்த்தேன். அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை
ராம்
https://www.facebook.com/video.php?v=891871817509696
அன்புள்ள ராம்
இந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடித்து கூண்டிலேற்றுவது மிக எளிது. குழந்தையைக் கொடுத்துவிட்டு கடைசியில் சென்று வாங்கும் அந்தப் பெண்ணையும் தண்டித்தாகவேண்டும்
இந்த குரூரம் மதத்தின் பெயரால் நிகழவில்லை. மதமோ ஆன்மீகமோ அல்ல இது. அறியாமை மோசடியை சந்திக்கும் ஒருபுள்ளி மட்டுமே
ஜெ