அது நீயே!

”மெல்லியல்புள்ளவனே

அந்த ஆலமரத்தின் கனியை கொண்டுவருக”

”இதோ தந்தையே”

”அதை பிளந்துகாட்டு”

”இதோபிளந்துவிட்டேன்”

”என்ன காண்கிறாய் அங்கே?”

”அணுநிகர் விதைகள் தந்தையே”

”அவற்றில் ஒன்றை பிளந்துபார்”

”பிளந்துவிட்டேன்”

”என்ன காண்கிறாய்?”

”இதற்குள் ஒன்றுமில்லை”

”மெல்லியல்புள்ளவனே

நீ இங்கே காணாதுபோன நுண்மையே

இந்த மாபெரும் ஆலமரமாக ஆகியது

ஆகவே அன்பனே

கவனத்துடன் இருப்பாயாக

அதிநுண்மையான அதுவே

இப்பிரபஞ்சமாக ஆகியது

இங்கெல்லாம் நிறைந்திருக்கிறது.

அதுவே உண்மை,

அதுவே ஆத்மா,

ஸ்வேதகேது அது நீயேதான்.”

[சாந்தோக்ய உபநிடதம்]

பிளவுபடுத்தும் எல்லா சிந்தனைகளுக்கும் எதிராக ஒரு புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள்!

முந்தைய கட்டுரைஇந்திய ஞானம்
அடுத்த கட்டுரைகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.