ஒரு டாக்டர்!

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். இதில் உள்ள பின்னிணைப்பில் ஒரு டாக்டர் நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றியிருந்தார். கேட்டு ஒருமாதிரி உடம்பே கூசியது. அடச்சீ என்பதற்கு அப்பால் ஒரு வார்த்தைகூடச் சொல்ல தகுதியற்ற பதிவு

அந்நிகழ்ச்சி டாக்டர்களை கோபப் படுத்தியிருக்கலாம். அவர்கள் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கலாம். ஏன் கோபத்தைக்கூடக் கொட்டலாம். ஆனால் இந்த ஆசாமியின் பேச்சின் தரத்தைப் பாருங்கள். அதிலுள்ள நம்பமுடியாத அளவு பாமரத்தனம்! பத்தாம் கிளாசும் பாட்டும் பாஸான நம்மூர் பையன்கள் இதைவிட மேலாக ஏதாவது சொல்வார்கள். இந்த கேட்டுக்கு ஆஸ்கார் வைல்ட் பொன்மொழி வேறு. தினமலர் வார இதழில் வாசித்திருக்கலாம்.கொடுமை!

இந்த ஆசாமிகளிடம் கொண்டுபோய் நம் உடலை காட்டவேண்டியிருக்கிறது என்பதற்கு மேலாக இந்நூற்றாண்டில் ஓர் இந்தியன் அடையும் அவமதிப்பு வேறேதும் உண்டா?

http://balaji_ammu.blogspot.in/2014/08/blog-post_28.html

முந்தைய கட்டுரைகண்ணனின் முகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 11