shankaran e r
அன்புள்ள சங்கரன்
ஏன் வாழ்க்கையில் முழுமையான தோல்வி என்றால் அது தோல்வியுற்றவனின் கதை என்பதனால்தான்…காரணம் இல்லாவிட்டால் தான் வாழ்க்கையின் போக்கு முழுமையாக நம்பகத்தன்மை பெறுகிறது
ஜெ
shankaran e r
ஜெ
அன்புள்ள ஜெ
மீண்டும் கொஞ்சம் கொஞ்ச்மாக விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது நாலாவது முறை. இப்போது என் மனம் ஞானசபை விவாதங்களிலேயே கட்டுண்டு கிடக்கிறது. முதலில் வாசித்தபோது அந்த கோயிலும் நகரமும் வர்ணிக்கப்பட்டிருக்கும் விதம் தான் பெரிய ஒரு பிரமிப்பினை அளிப்பதாக இருந்தது. இரண்டாம் முறை வாசித்தபோது ஞானசபை விவாதங்களை பொறுமையாக வாசித்தேன். ஆனால் நீங்கள் கதையை அற்புதமாகப் பின்னிச் செல்வதைத்தான் கவனித்தேன். ஆனால் இப்போது ஞானசபை விவாதங்களில் உள்ள கவித்துவம்தான் முக்கியமானது என்று தோன்றி விட்டது. சிந்தனைகளுக்கு நீங்கள் அளிக்கும் கவித்துவமான அடிக்குறிப்புகள் நிறைந்தது இந்த பகுதி. கிண்டலாகவும் சீரியஸாகவும் பலவிதமாக சிந்தனைகளை கவிதையால் விமரிசனம் செய்துகொன்டே போகிறீர்கள்…
இன்னும்கூட விஷ்ணுபுரத்தை வாசிப்பேன் என நினைக்கிறேன். வாசித்துத் தீராத நூல் இது
அரசன் சண்முகம்
நன்றி சண்முகம்
எனக்கும் ஞானசபை விவாதங்கள் மேல் ஒரு பிடிப்பு உண்டு. இப்போது அதில் உள்ள நுண்ணிய கிண்டல்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த தத்துவங்களை வாசித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவை. கோபுரங்களில் யாரும் பார்க்காத இடங்களில் சிற்பி சில நுட்பங்களைச் செய்து வைத்திருப்பான். ஒருவேளை அதையெல்லாம் யாருமே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தால் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…அதைப்போல
ஜெ