திருமா

ணையதள நண்பர்களின் பேராதரவோடு இந்த தளம் தனது இரண்டாம் ஆண்டில்அடியெடுத்து வைக்கிறது..


இருபத்தைந்து ஆண்டு கால அரசியல் வாழ்வில்,எத்தனை எத்தனை இடர்களையும், இருடடிப்புகளையும் எமது கட்சி கடந்து வந்திருகின்றது.எத்தனை எத்தனை போரட்டங்கள் நடத்தினாலும் அதை பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து எமது போரட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தடை கற்களாய் இருந்த சமயத்தில், இளையோர் மத்தியிலும்,இணையத்தின் வாயிலாக எமது செய்திகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த தளமானது www.tholthiruma.blogspot.com என்று இயங்கி வந்தது பின்னர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுது பிறந்த நாளில் www.thiruma.in என்ற முழு இணைய தளமாக செயல் பட்டு வருகிறது .


இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எமது தளத்தை ஒரு போராட்ட காலமாய் மாற்றிட பெரும்பாடுபட்ட நண்பர்களுக்கும், இணையவாசிகளுக்கும், பதிவர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அனைவருக்கும், எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திய தலைவர் திருமாவிற்கும், வன்னி அரசு அண்ணாவிற்கும், தமிழ்மண் ஆதிரை, கவினி அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் …  எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் பல்வேறு புதிய செயல்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை இந்நேரத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளுடன்
ஸ்ரீதர் – 9841544115
ரமணன் – 9884233955
முந்தைய கட்டுரைஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள்