கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?

அன்புள்ள எம்டிஎம்,

கொரிய கோழிச்சமையல் வாசித்தேன். சுவாரசியமான பகடி. பகடிசெய்யப்படுவதை கூர்ந்தறிந்து செய்யப்படும் பகடிக்கு உள்ள மதிப்பே தனிதான். வாழ்த்துக்கள்

கொரியா மகாபாரதக்காலத்தில் கொரதேசம் என்று அழைக்கப்பட்டது. கொர என்றால் இணைப்பு. ஆகவே கொரியக்கோழிகளை சமைக்கும்போது எலும்பின் மூட்டுகளை முழுமையாகவே விலக்கிவிடவேண்டும். அதை நீங்கள் சொல்ல விட்டுவிட்டீர்கள்

ஜெ

ஹா ஹா ஜெயமோகன்! இப்படி முதுகு ஒடிய மகாபாரதம் எழுதுகிறீர்கள் அவ்வபோது இப்படி உங்களை சுவாரஸ்யப்படுத்தவிட்டால் எப்படி? ஆனால் பாருங்கள் உங்கள் வாசகர்கள் சிலருக்கு கோபம் தாங்கமுடியவில்லை. அவர்களுக்காக மார்க் ட்வைன் ஹக்கில்பெர்ரி ஃபின்னுக்கு எழுதிய எச்சரிக்கையினை எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறேன். கோழிகளுக்கு எலும்பு மூட்டுகளை நீக்குவதை அடுத்து ஒரு ஆயுர்வேத ‘சிகிழ்ச்சை’ கட்டுரை எழுதி சரி செய்துவிடுகிறேன்.

அன்புடன் எம்டிஎம்

கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசர்மிளா ஸெய்யித்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50