அளப்பருந் தன்மை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவுக்கு,

இதில் வரும் உவமை பிடித்திருந்தது.முகநூலில் பதிவிட்டேன்.உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

திருவாசகத்தின் திருவண்டப்பகுதியின் ஆரம்ப வரிகளை வாசித்தேன்.அறிவியலா!ஆன்மீகமா! அடிச்சு விளையாடி இருக்கிறார் மாணிக்கவாசகர்.அவருடைய காலத்தில் இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று நண்பரிடம் வியந்து சொன்னேன்.அவருக்காக நரிகளையே பரிகளாக்கியவர் இந்த’சின்ன’ விசயத்தை சொல்லிக்கொடுக்காமல் இருந்திருப்பாரா என்று நண்பர் சீரியஸாகவே கூறினார்.அதுவும் சரிதான்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்-(திருமுறை- 8:3)

அருளியவர்:மாணிக்கவாசகர்,பொது ஆண்டு:ஒன்பது நூற்றாண்டு

பொருள்:ஆராய்ந்து பார்த்தால் அண்டத்தின் பகுதியான உருண்டைவடிவ திரள்கள் அளவிடற்கரியவை வளப்பெருங்காட்சியுடைவை.ஒவ்வொன்றாக இவற்றின் எழிலை கூறப்போனால் நூற்றொரு கோடிக்கும் மேற்பட விரிந்துள்ளன.அவை வீட்டில் நுழையும் சூரிய ஒளியில் நெருங்கித் துலங்கும் சிறிய நுண் துகள்கள் போன்று சிறியனவாகும்படி பெரியவனாவான்(இறைவன்).

சிவேந்திரன்

SHIVA_DESTRUCTION_by_VISHNU108

அன்புள்ள சிவேந்திரன்,

இதில் வியப்படைய ஏதுமில்லை. இந்தியப்பெருநிலத்தில் எழுதப்பட்ட வரலாறு தொடங்கும்போதே அண்டப்பேரண்டங்களின் பிறப்பு – நிகழ்வு – அழிவு குறித்த அடிப்படைவினாக்கள் எழுந்து விட்டன. அனைத்துக்கோணங்களிலும் விவாதிக்கவும்பட்டிருக்கின்றன. அந்த அத்தனை தரப்புகளும் தமிழகத்தில் இருந்தன என்பதற்கு மணிமேகலையின் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையே சான்று.

ஜெ

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 16
அடுத்த கட்டுரைநீலம்