ஆர்.வி அவரது இணையதளத்தில் அம்பையின் பேட்டி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘சிவசங்கரி மாதிரி சிலர் இலக்கியம் படைக்க முயற்சி செய்திருந்தாலும், லக்ஷ்மி மாதிரி சிலர் ஒரு காலத்தின் தேவையை பூர்த்தி செய்திருந்தாலும், “பெண்” எழுத்தாளர்களை நான் அனேகமாக நிராகரிக்கிறேன்’ என்று சொல்கிறார் பெண்எழுத்தாளர்களின் எழுத்தின் தரம் பற்றிய விவாதத்தில் ‘எங்க என்னையும் முற்போக்குன்னு சொல்லு’ என்றவகை எதிர்வினைகள்தான் அதிகம். ஆர்வி அவரது கருத்தைச் சொல்லி மண்டகப்படியை எதிர்பார்க்கிறார். அதை அவரது நண்பர்களும் நண்பிகளுமே அளிப்பார்கள் என நினைக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவரையும் வசைபாடலாம்
ஆளுமை அம்பையின் பேட்டி