ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது

விழா

முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழிலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கிவருபவர் ராஜமார்த்தாண்டன். கறாரான இலக்கிய ரசனையும் கருத்துக்களும் கொண்ட திறனாய்வாளர். க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வழிவந்தவர் என்று அவரை அடையாளப்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் எவரிடமும் மனக்கசப்புகளை அவர் உருவாக்கியதில்லை. தமிழில் அவருக்கு எதிரிகளே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

கொல்லிப்பாவை என்ற இலக்கிய இதழை நடத்தியவர். தமிழ் புதுக்கவிதை வரலாறு, கொங்குதேர்வாழ்க்கை [புதுக்கவிதை தொகுதி] [இரண்டும் தமிழினி பிரசுரம்] ஆகியவை முக்கியமான நூல்கள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

தினமணி நாளிதழில் துணையாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்று இப்போது தன் சொந்த ஊரில் வசிக்கிறார். கன்யாகுமரி அருகே சந்தையடி. காலச்சுவடு பிரசுர நிறுவனத்தின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுகிறார்.

ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு அறுபது வயதாவதை ஒட்டி அவருக்கு ஒரு விழாவை நாகர்கோயிலில் நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.

நாள் :26-7-08 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: ஆர்.ஓ.ஏ. பில்டிங், கலக்டர் ஆ·பீஸ் அருகே. நாகர்கோயில்

தலைமை:       கொடிக்கால் சேக் அப்துல்லா

முன்னிலை:      ஆர்.கெ.ராஜகோபாலன் [ கொல்லிப்பாவை நடத்தியவர்]

அறிமுக உரை :  நெய்தல் கிருஷ்ணன்

வாழ்த்துரை:      எம்.எஸ்

               நாஞ்சில்நாடன்
 
               சுரேஷ் குமார இந்திரஜித்

               சுகுமாரன்

               ந.முருகேசபாண்டியன்

               ஜெயமோகன்

ஏற்புரை:         ராஜமார்த்தாண்டன்

ஒருங்கிணைப்பு:   அ.கா.பெருமாள்

நீல பத்மநாபன் பாராட்டு விழா

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

முந்தைய கட்டுரைஷோலே
அடுத்த கட்டுரைஒரு விழா