பெண்கள்- கடிதங்கள்

தங்களுடைய பெண் படைப்பாளிகள் (?!) குறித்த கருத்துகளுக்கு பதிலாக எழுதபடிருக்கும் கூட்டறிக்கையை வாசித்தேன் .நான் சமூக ஊடகங்களில் பங்கு கொள்ளாத காரணத்தினால் எனக்கு இந்த சம்பவங்கள் குறித்த விவாதங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியாது .அனால் ஒரு வாசகனாக சில விஷயங்களை கூற விரும்புகிறேன் .அதனை இந்த சிறு பதிவின் வாயிலாக செய்கிறேன் .

சொல்லெறிந்து கொல்வதற்கு முன்

எத்தகைய விவாதங்களும் நல்லது தான் .விவாதங்கள் ஒரு வகையான உயிரசைவை உருவாக்குகின்றன .அனால் எந்த ஒரு விவாதத்திற்கும் இரு தரப்பும் ஏற்றுகொண்ட பொது விதிகள் வேண்டும் .அத்தகைய ஒரு பொது வெளி இல்லாவிடில் விவாதம் என்பது ஒரு வகையான காட்டு கூச்சலாக மட்டுமே இருக்கும்.இம்முறை ஜெமோ வை விமர்சிக்க முயல்பவர்கள் எந்த ஒரு விமர்சன அறத்தையும் கடை பிடிப்பதாக தெரியவில்லை.இந்நிலையில் நாம் கிழ்கண்ட விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும் .

1.பொதுவாக ஒரு எழுத்தாளன் பெண்களை குறித்து என்ன கூறுகிறான் என்பதை அவன் படைப்புகள் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும் .திரு ஜெயமோகனின் படைப்புகளில் என்றும் பெண்கள் ஒரு மைய இடத்தை பெற்றுள்ளனர் . அவரது பின் தொடரும் நிழலின் குரல் மிகவும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கிய புதினம் .இந்த புதினத்தில் அவர் இவ்வுலகம் ஆண்களால் ஆட்சி செய்ய படாமல் பெண்களால் ஆட்சி செய்ய பட்டிரிந்தால் எத்தனையோ நிம்மதியாக அவசியமற்ற போர்கள் இல்லாமல் இரிந்திருக்கும் என்பதை கூறுகிறார்.இந்த நூலில் அறத்திற்கு உதாரணமாக வருவது வீரபத்திர பிள்ளையோ அருணாச்சலமோ இல்லை .தனது உயிர் போனாலும் அநியாயத்திற்கு எதிராக போரிடுவேன் என கூறும் அருணாச்சலத்தின் மனைவிதான் கதாசிரியன் சுட்டி காட்டும் லட்சிய கதாபாத்திரம் .அவள் தனது கை குழந்தையை கூட விட்டு விட்டு உயிர் துறக்க தயார் என தெளிவாக கூறுகிறாள் .எதனை அவள் மிக இயல்பாக எந்த வித சித்தாந்த சிடுக்குகளும் இல்லாமல் கூறுகிறாள் .அவளிடமிருந்தே அருணாசலம் மன உறுதியை பெறுகிறான்.மேலும் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் .வீரபத்ர பிள்ளை ,அருணாச்சலத்தின் அரசியல் குரு மற்றும் அருணாசலம் ஆகிய மூவரும் தங்கள் வாழ்கையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் .வருட கணக்காக நம்பிய கோட்பாடுகள் அவர்களுக்கு எதிராக கூத்தாடுகின்றன .அவநம்பிக்கை அவர்களை ஆட்டி வைக்கிறது .அனால் அருணாசலமும் அவனது அரசியல் ஆசானும் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள் .வீரபத்திர பிள்ளை அத்தகைய ஒரு விடுபடல் இல்லாமல் துன்புற்று இறக்கிறார் .எனக்கு தெரிந்து இவர்கள் இடையே உள்ள வித்தியாசம் ஓன்று தான் .முன்னவர்களுக்கு கிடைத்த பெண்களின் அன்பு, அதரவு மற்றும் வழிகாட்டல் வீரபத்திர பிள்ளைக்கு கிடைக்க வில்லை என்பது தான் அது .இதனை நமது தோழியர் கருத்தில் எடுத்து கொண்டார்களா என்று தெரிய வில்லை

2. .திரு ஜெயமோகனின் சிறுகதைகளில் செவ்வியல் கூறுகளை மொத்தமாக கொண்டது அறம் .செவ்வியல் இலக்கியங்களால் மட்டுமே ஒரு வாசகன் catharsis என்னும் உணர்வு விடுதலையை அடைய முடியும் .இக்கத்தை அத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இங்கும் அறத்திற்கு உருவமாக நிற்பது அனைத்தையும் கற்ற எழுத்தாளன் அல்ல .ஆச்சி தான் .

3.இன்னுமொரு சிறுகதை .பெயர் நினைவில் வரவில்லை .ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை மைய்யமாக கொண்டது.அந்த கதையில் ஒரு பெண் விஞ்ஞானியை பிற ஆண்கள் எவ்வாறு அவரது பால் நிலையை கொண்டு ஹிம்சை செய்கிறார்கள் என்பதை நுட்பமாக விவரித்திருப்பார் .உதாரணதிற்கு விவாதத்தின் பொது அவரிடம் அனைவருக்கும் காபியை கொடுக்குமாறு ஒருவர் கூறுவார்.Women in Science and Technology என்பது இன்று ஒரு முக்கியமான ஆய்வு பிரிவு .ஆய்வு பணிகளில் ஈடுபடும் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் கண்ணுக்கு தெரியாத வன்முறைகளை இச்சிறுகதை வெளிச்சமிட்டு காட்டுகிறது .

4.ரப்பர் ,கன்னி நிலம் போன்ற நூல்களிலும் ஆண்களால் செய்யப்படும் பாலியல் அரசியலின் வன்முறைகள் தோலுரித்து காட்ட படுகின்றன .

5.ஒழிமுறி திரைப்படம் வாயிலாக திரு ஜெயமோகன் காட்டும் வலிமையான பெண் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட இன்றைய மாற்று திரைப்படங்களில் கூட எந்த ஒரு பெண் கதாபாத்திரமும் கிடையாது.

6.ஒரு விமர்சகனாகவும் அவர் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறார் .தனது விமர்சன பள்ளியின் கோட்பாடுகளுக்கு ஏற்ப அவர் சில பெண் படைப்பாளிகளின் பெயர்களை படைப்புகளை பட்டியல் இட்டிருக்கிறார் .

7.குருவி மண்டை என அவர் கூறியது Bird Brained என்னும் ஆங்கில சொல்லின் இணையான தமிழ் வார்த்தை என எண்ணுகிறேன் .

இந்நிலையில் அவருக்கு எதிரான வாதங்களில் எந்த ஒரு தற்க நியாயங்களும் இல்லை என்றே எண்ணுகிறேன் .எப்போதும் நுண் வாசிப்பு என்ற பெயரில் யார் மீதும் பழி சுமத்த முடியும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன் .உதாரணதிற்கு பெண்ணிய எழுத்தாளர்களின் அறிக்கையில் மிலேச்ச என்ற வார்த்தை வருகிறது .இந்த வார்த்தையின் பின்புலத்தை பற்றி நான் கூறி ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .இது போன்று அந்த அறிக்கையை (எந்த அறிக்கையையும் ) கட்டு உடைப்பு ,.வார்த்தை சார்ந்த பகுப்பாய்வு என்று இறங்கி யார் மீதும் பழி போடலாம்.

ஜெயமோகனின் கருத்துக்கள் புறகணிக்கதக்கது என்றால் அதனை உதாசீனம் செய்துவிட்டு செல்லலாம் .இல்லை ,அவருக்கு மறுப்பு தெரிவிப்பது என்றால் நமது மொழியின் தலை சிறந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை புத்தகங்களாக /மின் புத்தகங்களாக வெளி கொண்டு வரலாம் .அது தான் மார்க்சின் சிந்தனை மரபில் வந்தவர்கள் செய்யும் எதிர் இயக்கமாக இருக்கும் என எண்ணுகிறேன் .உங்கள் சிந்தனை பள்ளி மற்றும் ஜெயமோகனின் சிந்தனை பள்ளி ஆகியவை இடையே நடக்கும் அத்தகைய இலக்கிய முரண் இயக்கம் வாசகர்களுக்கும் /விமசகர்களுக்கும் மிகுந்த பயனை தரும் .இலக்கிய மேம்பாட்டிற்கு உதவும் .

சொல்லெறிந்து கொல்வதற்கு காத்திருக்கும் வேளையில் இதனையும் கருத்தில் கொள்ளவும்
நன்றி
ஒரு வாசகனாக
அனீஷ் க்ருஷ்ணன் .

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். பெண் எழுத்தாளர்கள் கையெழுத்திட்டிருந்த அறிக்கையை பார்த்தேன். அந்த அறிக்கையில் கனிமொழி கையெழுத்திட்டிருக்கிறாரா என்று தேடினேன், காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் எனக்கு தெரிந்து, “ஒரு இலக்கிய படைப்பு, அந்த படைப்பை மட்டுமே முன்வைத்து அறியப்படவேண்டும் மற்ற எதையும் முன் வைத்து அல்ல”, என்று 1990 களில் கனிமொழி “கருணாநீதி” என்ற பெயரில் சுபமங்களாவில் ஒரு கவிதை வெளியிட்டிருந்த காலகட்டங்களிலேயே அதை விமர்சித்து இருந்தீர்கள், அப்படி பார்க்க போனால் அவர்தான் இதில் முதலில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் இல்லையா?

//பதினைந்துவருடம் முன்பு சுபமங்களா இதழில் கனிமொழி கருணாநிதி என்ற பேரில் ஒரு கவிதை வெளிவந்தபோது நான் கோமல் சாமிநாதனை அழைத்து ஒரே விஷயத்தைக் கேட்டேன். தன் பெயருடன் தந்தை பேரை இணைத்துத்தான் கனிமொழி அக்கவிதையை அனுப்பினாரா என. ஆம் என்றார். அது ஒரு கவிஞர் ஒருபோதும் செய்யக்கூடிய செயலல்ல. தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு. பிற அடையாளங்கள் வைத்து அங்கீகாரம் பெற அவர்கள் விரும்ப மாட்டார்கள்.http://www.jeyamohan.in/?p=231 பிப்.2008//

கிட்டதட்ட இருபது வருடம் முன்பான உங்கள் கருத்து இதுவாகவே இருந்திருக்கிறது, தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு, மற்ற “எதையும்” முன் வைத்து அல்ல என்பதே இப்போதும் எப்போதுமான உங்கள் கருத்து நிலையாக இருக்கிறது. இன்று பெண்களை தவறாக பேசிவிட்டீர்கள் என்று சொல்பவர்கள் கனிமொழி பற்றிய உங்களது இந்த கருத்தும் தவறு என்று சொன்னார்களா? சொல்வார்களா? ஏனெனில் அடிப்படையில் இந்த இரண்டிலும் நீங்கள் சொல்லவருவது ஒன்றே. நியாயமாக பார்த்தால் கனிமொழிதான் இங்கு முதல் கையெழுத்திட்தடிருக்க வேண்டும். (ஒருவேளை அப்போது இதுமாதிரி ஒரு கையெழுத்து கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என்ற அவர் வருத்தமாக கூட இருக்கலாம் :-):-).) ஆனால் அதே பெண் சிறையில் இருந்த போது தொலைக்காட்சிகளில் இருந்து அழைத்துக் கனிமொழி பற்றிய கருத்துக்களைக் கேட்டபோதும், எழுத வற்புறுத்தின போதும், ஸ்பெக்ட்ரம் பற்றி, கனிமொழியின் இலக்கியத் தகுதி பற்றி எழுதச் சொன்ன போதும் (’அவங்க அதிகாரத்திலே இருந்தப்பக்கூட நீங்க அசராம அவங்களைப் பற்றிக் கடுமையாக் கருத்து சொன்னீங்க சார்’ …’அதனால நீங்கதான் கருத்துச் சொல்ல தகுதியான ஆள்’.) “கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்” என்று சொன்னீர்கள் என்பதாவது இவர்களுக்கு தெரியுமா?

கனிமொழி

இலக்கியவாதிக்கும் எழுத்தாளனுக்கும் இதுதான் வித்தியாசம் என்பது என் தனிபட்ட கருத்து. இலக்கியவாதி தனக்கு முன் தன் படைப்பை முன்னிறுத்தி பெருமை கொள்கிறான், எழுத்தாளன் தன்னை முன்னிறுத்தி தனது படைப்பிற்கு அங்கிகாரம் கோருகின்றான். எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்துக்கான பயன்கள் அதிகம், அவர்களது அரசியலை முன்னெடுப்பதில் இருந்து, தனது வாழ்வாதாரம் வரை, ஆனால் அதை தவறென்று இங்கு நான் சொல்ல வரவில்லை, ஆனால் இலக்கியவாதிக்கு அந்த எழுத்து மனித மனங்களில் ஊடுருவி செய்யவிருக்கும் நர்த்தனங்களே முக்கியமாக இருக்கிறது. ஆனால் “இலக்கிய மனம்” இருந்தால் மட்டுமே ஒரு இலக்கியவாதியின் மனம் புரியும். இல்லையெனில், முன்முடிவுகளோடு

உங்கள்

முருகதாஸ்

 

ஜெ,

பெண் எழுத்தாளர்கள் தொடர்பான எனது பதிவு உங்களின் பார்வைக்கு:http://rbaala.blogspot.sg/2014/06/vs.html

நன்றி.
Cheers,
BALA.R

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21
அடுத்த கட்டுரைநினைவஞ்சலி : கீதா ஹிரண்யன், உடலிலக்கியம்