எங்கே நிற்கிறார்கள்?

ஜெ

நீங்கள் சுட்டிகொடுத்தமையால் நான் திருமதி கொற்றவை என்பவரது இணையதளத்துக்குச் சென்று அங்கே இருந்த உங்களைப்பற்றிய வசைகளை வாசித்தேன். அதிர்ச்சியும் அருவருப்பும் ஏற்பட்டது. இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள் என்று திகைத்தேன். அதன்பின் அங்குள்ள சில கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் மலக்குழிக்குள் இறங்கி நின்ற உணர்வு. அற்பச்சண்டைகள். நீங்கள் குழாயடிச்சண்டை என்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்தப்பெண்ணும் இந்தத் தரத்திலான குழாயடிச்சண்டைகளைப்போடுவதில்லை. உங்கள் இணையதளமும் நீங்களும் செயல்படும் தளம் என்ன, நீங்கள்வெளியிடும் கட்டுரைகளின் தரம் என்ன என்று ஓரளவு வாசிப்பவர்களுக்கும் தெரியும் . தயவுசெய்து உங்கள் தரத்துக்குக் குறைவானவர்களுடன் விவாதிக்காதீர்கள்

சுந்தரம்

மாதிரிக்கு மூன்று கட்டுரைகள். இவர்கள் வாழும் உலகும் புழங்கும் அறிவுத்தளமும் என்ன என்று காட்டும். இப்படி அந்தரங்கத்தை வசையாக பதிவுசெய்து வாசகர்களைப்பெறுபவர்கள்தான் பெண்களின் கௌரவம் பற்றியும் உரிமை பற்றியும் பேசுவதா?

http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_9762.html?utm_source=BP_recent
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_3622.html?utm_source=BP_recent
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_9762.html?utm_source=BP_recent
http://saavinudhadugal.blogspot.in/2014/04/blog-post_3.html?utm_source=BP_recent

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21