கல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்

அன்புள்ள ஜெ,

அழுத்தமான, தர்க்கபூர்வமான கட்டுரை. நரேந்திர மோதி தலைமையிலான புதிய மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் குறித்து, “அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியான, ஜனநாயக பூர்வமான கருத்து.

// இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன் //
என்கிறீர்கள். அவ்வளவு தீவிர அவநம்பிக்கைக்கான முகாந்திரம் தேவையில்லை. கடந்த சில ஆண்டுகளில் மோதியின் குஜராத் அரசு உட்பட மற்ற பாஜக மாநில அரசுகள் கல்வி, பண்பாடு, கலாசாரத் துறைகளில் தங்கள் மாநிலங்களில் செய்துவரும் சீரிய நடவடிக்கைகளைப் பரிசீலித்துப் பார்த்தாலே இது புரியும்.

ஒரு உதாரணம். 2003 ஆம் ஆண்டு வாக்கிலேயே வாஜ்பாய் அரசு, மத்திய அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் இந்திய சிந்தனை மரபுகள் குறித்த ஒரு முழுப் பாடத்தை விருப்பத் தேர்வுப் பாடமாக அறிவிக்க எண்ணி அதற்கான முயற்சியைத் தொடங்கியது. பிறகு ஆட்சி மாற்றத்தால் அது கிடப்பில் போடப்பட்டு ஒரு வழியாக 2012ல் CBSE பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்டது. பல பள்ளிகள் இந்த விருப்பப் பாடத்தை தாங்கள் கற்பிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்தன. இதற்கான பாடப் புத்தகங்களை நான் தரவிறக்கம் செய்து படித்தேன். சில குறைகள் இருந்தாலும், ஆச்சரியமளிக்கும் வகையில் அவை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நன்றாகவும் இருந்தன. அது பற்றி ஃபேஸ்புக்கில் நான் எழுதியதைக் கீழே அளித்திருக்கிறேன்.

இந்த அரசின் கீழ், இத்தகைய கல்விப் புல முயற்சிகள் மேலும் வீரியத்துடன், பல மடங்கு சிறப்பாக நடைபெறும் என்று கருதுவதற்கே இடமுள்ளது.
“Knowledge Traditions and Practices of India” – CBSE announced this elective course for 12th Std in September 2012. It was reported that many schools enthusiastically welcomed this new course and wished to offer it in their schools. What is the actual status now, I don’t know.

I downloaded the course text book and studied it. Found it to be quite well written, well illustrated and beautifully presented. Almost all important aspects of Indian culture are covered in the10 modules of the course. There are a few minor mistakes in the content, but the overall effort is very worthy and commendable.

For example, in module 3, excerpts of translations from the original verses of Mahabharata (Vana Parva), Kalidasa (Meghadutam), Andal (Thiruppavai), Kabir, Silappadhikaram etc. are given. They are eminently readable. The historical and social context of these literary works are also discussed.

In module 6, Ayurveda theory and practice both are given due place. It covers many things, from Charaka Samhita excerpts to practical guidelines on balanced diet.

I would highly recommend this book to introduce Indian culture to high school students and young readers, even to adult readers who are not so conversant in the subject.

To download: Go to http://cbseacademic.in/circulars2012.html. In the table, look for Acad-68/2012 circular in September. You have to individually download separate pdf files for each module.

Module 1 : Astronomy in India
Module 2 : Chemistry in India
Module 3 : Indian Literatures Part 1
Module 3 : Indian Literatures Part 2
Module 4 : Indian Philosophical Systems
Module 5 : Indian Traditional Knowledge on Environmental Conservation
Module 6 : Life Sciences (1) Ayurveda for Life, Health and Well-being – Part 1
Module 6 : Life Sciences (2) The Historical Evolution of Medical Tradition in Ancient India – Part 2
Module 6 : Life Sciences (3) Plant and Animal Sciences in Ancient India – Part 3
Module 7 : Mathematics in India
Module 8 : Metallurgy in India
Module 9 : Music in India
Module 10 : Theatre and Drama in India

அன்புடன்,
ஜடாயு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15
அடுத்த கட்டுரைஉலகம் யாவையும், சோற்றுக்கணக்கு