கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் கண்ணதாசன் விருது இலக்கியம் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத்தில் இதுவரை நாஞ்சில்நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இலக்கிய விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுத் தொகை ரூ 50000 மற்றும் நினைவுச்சின்னம் அளிக்கப்படும். வரும் 22.06.2014 அன்று கோவையில் பரிசளிப்பு விழா. கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் விழா நிகழும்.