வரலாற்றின் கலை வடிவம் — அரவிந்தன்
‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது.
நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல்.
கலைப் பரப்பில் வெளிப்படும் மனிதர்களைப் போலவே சமூகங்களும் வகைமாதிரிகள்தாம். பரந்த பொருளில் குறியீடுள்தாம். இந்தத் தன்மைதான் கால, இடம் தாண்டி இலக்கியத்தை உலகப் பொதுவானதாக ஆக்குகிறது. 20ஆம் நூற்றாண்டின் பரதவர் சமூகம் பற்றிப் பேசும் ‘கொற்கை’யும் அப்படித்தான். இதனாலேயே புவியில் எல்லைகளையும் காலப் பரப்பையும் மூகவரையறைகளையும் தாண்டி விரிவுகொண்டு நிற்கிறது இந்த நாவல்.
நாவல் காலூன்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உஷீமீளார்ந்து நிற்கும் சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன.
.—– அரவிந்தன்
அளவிலும் கலை சார்ந்த பரப்பிலும் விரிந்திருக்கும் இந்த நாவலுக்கு முன் வெளியீட்டு விலைத் திட்டத்தை
முன்வைப்பதில் காலச்சுவடு மகிழ்ச்சிகொள்கிறது.
1350 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.800. இது
முன் வெளியீட்டு விலைத் திட்டத்தின் கீழ் ரூ. 480-க்குக் கிடைக்கும். டிசம்பர் 25 தேதிக்குள் பணம் செலுத்துபவர்களுக்குச் சலுகை விலையில் நூல் அனுப்பிவைக்கப்படும்.
முன் வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்பவர்கள் புத்தகத்தைச் சென்னைப் புத்தகச் சந்தையில் (டிசம்பர் 30 -ஜனவரி 10) காலச்சுவடு ஸ்டாலில் பெற்றுக்கொள்ளலாம். பிரதிகள் தபால்வழி ஜனவரி 20ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும்.
பணம் செலுத்தும் முறை
முன் வெளியீட்டுத் திட்டத்தில் டிசம்பர் 25வரை நாகர்கோவில், சென்னை காலச்சுவடு அலுவலகங்களில்
நேரில் பணம் கட்டலாம். பணவிடையாகவோ வரையோலையாகவோ அனுப்புபவர்கள் நாகர்கோவில்
முகவரிக்கு அனுப்புக. காசோலையாக அனுப்புபவர்கள் ரூ.50/- சேர்த்து அனுப்பவும். காலச்சுவடு ICICI
கணக்கிலும் (Kalachuvadu Pathippagam, Nagercoil, கணக்கு எண் : 609505010967) பணம் செலுத்தலாம்.