படைப்பாளிகள்பேரவை,ரமணர்,சைவசித்தாந்தம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சி இலக்கியவாதிகளை திரட்டி ஒருங்கிணைப்பதைப்பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். அதில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தலித்துக்கள் இந்தியா மிழுக்க அவ்வாறு ஒருங்கிணைந்து போராடியிருக்கிறார்கள். அதன் விளைவாகவே தலித் இலக்கியம் உருவானது. வன்னியர்களும் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான சமுதாய மக்கள்தாம். அவர்கள் ஒருங்கிணைந்து போராடுவதில் என்ன தவறு? நாடார்கள் தேவர்கள் அனைவருமே சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள்தான். அவர்கள் ஒருங்கிணைவதில் தவறே இல்லை. நீங்கள் உயர்சாதியினர் தங்கள் சாதிய ஆதிக்கத்துக்காக அப்படி ஒருங்கிணைந்தால்தான் தவறு என்று சொல்ல வேண்டும். வன்னியர்கள் வன்னியர்களுக்காக போராடாமல் வேறு ஆர் போராடுவார்கள்? பிற்பட்டவர்களின் ஆதிக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள். இத்தனை நாள் முற்பட்டவர்களின் ஆதிக்கம் இருந்ததே? அதேபோல கொஞ்சநாள் பிற்பட்டவர்களின் ஆதிக்கம் வந்தால் என்ன தப்பு?

செல்வகுமார்

*

அன்புள்ள ஜெயமோகன்,

சாதிசார்ந்து எழுத்தாளர்கள் ஒருங்கிணைவதற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். பாலபாரதி தன் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருக்கிறார்.

http://blog.balabharathi.net/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/

மனோகர்

அன்புள்ள மனோகரன்

அந்த பதிவை நான் கவனிக்கவில்லை. அதேபோல மனுஷ்யபுத்திரன் ஜூலைமாத உயிர்மை இதழிலும் இதைப்பற்றி தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கலாச்சார அரசியல் பற்றிய தன் கண்டனைத்தை உயிர்மை பதிவுசெய்திருப்பதை படித்தேன்.
 

அன்புள்ள ஜெயமோகன்

…நான் இக்கடிதத்தை எழுதுவது ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக. நாராயணகுரு ரமணமகரிஷி இருவருமே பிரம்மஞானிகள். நாராயணகுருவின் சங்கல்பம் பற்றி ரமணமகரிஷி சொன்னதாக சொல்லபப்டும் கூற்றை நான் நம்பவில்லை. ரமணர் நாராயணகுருவைப்பற்றி மிகச்சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். நாராயணகுரு அந்திம படுக்கையில் இருந்தபோது ரமணர் அவரது உதவியாலராக இருந்த குஞ்சு ஸ்வாமியை நலம் விசாரிக்க அனுப்பினார். ரமணரின் மருமகனாகிய கணேசன் ரமணருக்கும் நாராயனகுருவுக்குமான சந்திப்பைப்பற்றி விரிவாகவும் அழகாகவும் ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரு நிகழ்வு. நாராயணகுரு ரமணாசிரமத்தில் மதிய வேளையில் அமர்ந்திருக்கிறார். ரமணர் வெளியே வந்து மலையாளத்தில் ‘ஊணு கழிச்சோ/’ என்று கேட்கிறார். குரு தமிழில் ‘மகரிஷி பிரசாதம் சாப்பிடலாம்’ என்று சொல்கிறார். சமூக மேம்பாடுக்காக உழைத்தல் என்பது நாராயணகுருவின் ஆளுமையில் ஒருபகுதி மட்டுமே. இன்னொருபக்கம் கனிந்த ஆத்ம ஞானியின் முகம் ஆகும். இது இன்றும் கேரளத்தில்கூட போதுமானபடி புரிந்துகொள்ள படவில்லை.
 
அன்புடன்
சீதாராமன்
பாலக்காடு
 

ஜெயகாந்தன் கதை படித்தேன். ‘அக்னி பிரவேசம்‘ ‘சில நேரங்களில் ில மனிதர்களாக‘ விரிந்தது போல ந்த கதையும் விரியலாம்லௌகீக ுடிவுகளை எடுத்துஅதில் உலகியல் சார்ந்த வெற்றிகளை அடைந்த ின்வைதிக (கந்ஸர்வேடிவ்முடிவுகளின் கொள்கை சார்ந்த நிலையில் ஈர்ப்பு  ஏற்படலாம்அதை மீண்டும் நடைமுறையில் கொணர முயற்சிக்கலாம்.
கருணை
 சார்ந்த மனிதாபிமான பார்வையில் பௌத்த மதம்சீன மற்றும் ஜப்பானிய சிந்தனை தாக்கத்தில் சில செவ்விலக்கியங்களை தந்துள்ள்துஅவற்றில், ‘தௌ தே ஜிங்‘ ுக்கியமான ஒன்றுதங்கள் அடிக்கடி குறிப்பிடும் நீதியின் தளங்களை  வேறொரு பார்வையில் வைத்தது பரிசீலிக்கிறதுஇதன் வாசிப்பிற்கு தங்கள் குறிப்பிடும் ‘முரணியக்கம்‘ பற்றிய அறிதல் அவசியம்

எனது சுமாரான
 மொழிபெயர்ப்பு
சடங்குகள்

புராதன
 அமைப்புகள் வேர் பரப்பியவை;
நம்பிக்கைகள்
 ரகசியமானவை – எளிதில் விடுபடுவதிலை;
சடங்குகள்
 தலைமுறைகளாக மனிதாபிமானத்தை ஆனந்தப் படுத்துகிறது

இயற்கை
 அதிர்வு (ஹார்மநீதன்னை தேடுவதில்லைஇயற்கையாகவே நிகழ்கிறது;
சடங்குகள்
 – இயற்கை அதிர்வுகளை தேடும் – எனவே கிடைப்பதில்லை

இயற்கை
 அதிர்வுக்கு இயக்கமிலை – காரணமில்லை
அன்பு
 நேரும் (இயங்கும்) – காரணமில்லை
நீதி
 இயங்கும் – காரணத்தில்தான்
ஆனால்
 சடங்குகள் இயங்கும் காரணம் கற்பிக்க

வழி
 தொலைந்தால்  இயற்கை அதிர்வு மீதி
இயற்கை
 அதிர்வு தொலைந்தால் அன்பு மீதி
அன்பு
 தொலைந்தால் நீதி மீதி
நீதி
 தொலைந்தால் சடங்குகள்தான் மீதி

பாசம்
 மற்றும் நேர்மையின் விளிம்பு சடங்குகள்
முதலில்
 குழப்பம் – பின் வண்ண ண்ண நம்பிக்கைகள்
அல்லது
 பயங்கள்
மடமையின்
 ஆரம்பம்

ஞானியார்
 தேடுவது இயற்கை அதிர்வை – நம்பிக்கையை  அல்ல
தேடுவது
 பழத்தை பூவை அல்ல
நாடுவது
 நிஜததை   மட்டுமே
பல வெளிப்பாடுகள்நமது வழக்கமா சிந்தனைக்கு எதிராக உள்ளது எனினும்இவை தரும் தரிசனம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.
குறிப்பு
என் பல நண்பர்கள்வசதிகளின் உச்சிக்கு சென்ற பின் ‘ஊஞ்சவிருத்தி ‘ முறையில் எளிய ாழ்க்கை வாழ விருப்பம் தெரிவித்து உள்ளனர்வசதிகளுடன் ஒரு தபஸ – வறுமையில் ஒரு தபஸ் – ‘ஐராநிக்‘ ஆக இருந்தது எனக்கு

அன்புடன்
முரளி

****

அன்புள்ள ஜெமோ,

தங்கள் “தத்துவ விவாத” பகடி சீரீஸ் மேலும் மேலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.  படித்து, சிரித்து மாளவில்லை.

சமீபத்தில் இது தொடர்பான ஒரு சீரியசான விவாதம்/உரையாடலில் நான் சிக்க நேர்ந்தது..

தமிழகத்தில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப்  பேச்சாளர்,  ஒரு பிரபல ஆன்மிக இதழில் “சித்தாந்தம்” என்பதற்கு சித்தத்திற்கு இயைந்தது (chiththam) என்று தமிழின் உச்சரிப்புக் குழப்பத்தையே  ஒரு  உரையாக்கி விடையளிக்க,   அது தவறு என்று நான் கடிதம் எழுதப்  போக,  அவர் தன் அம்பறாத் தூணியிலிருந்து அதே  மூன்று கேள்விகளை  பல கேள்விகளாகத் திரித்து எய்தார் ! 

சிரத்தையாக அந்த ஒவ்வொரு கேள்விக்கும் நான் விடையெழுதினேன்..  திண்ணை இதழில் சமீபத்தில் 4 பாகமாக வந்தது –

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4

தமிழகத்தில் சைவசித்தாந்தம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளையும், அரசியலையும், துவேஷங்களையும், கூச்சல்களையும் நீங்கள் மிகச் சரியாக அவதானித்திருக்கிறீர்கள்.  இந்த “விவாதத்தில்” கேட்கப் பட்ட கேள்விகளின் பின்னணியை உங்கள் பகடி புரியவைக்கிறது.. Apart from humor, it does have a educative value too.

ஒரு அற்புதமான தத்துவ-சமய மரபு  அதன் பொக்கிஷங்கள் (கோயில்கள், கலைகள்,வழிபாட்டு முறைகள், மடங்கள்) சீரழிந்து போவதைக் கண்டுகொள்ளாமல் சாதியம், இனவாதம்,வெறுப்பியல் பேசுபவர்களின் கூடாரமாகப் போய்க் கொண்டிருப்பது பெரும் வருத்தம் தருகிறது.

ஒரு ஒப்பீடாக,  கர்நாடக வீரசைவம் தனது மரபு சார் வாழ்க்கை முறையையும், பாரம்பரியத்தையும்  எந்தத் திரிபுகளுக்கும், வெறுப்பியலுக்கும் இடம் கொடாமல் காப்பாற்றி வளர்த்து வந்திருக்கிறது.  புராதன வீரசைவ மடங்கள் இன்று கர்நாடக மாநிலத்தில் கல்வி, சேவை, சீர்திருத்தம் போன்ற பல பணிகளிலும் முன்னணியில் நின்று ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றன..  மற்ற சமூகங்களுடன் நல்லுறவையும் வளர்த்து வருகின்றன.  ஒருகாலத்தில் தமிழகத்தின் அறிவியக்க, சமூக முன்னோடிகளாகத் திகழ்ந்த தமிழகத்தின் சைவ இயக்கங்கள் இதைப் பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 

அன்புடன், 

ஜடாயு   

****]

முந்தைய கட்டுரைசில கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுற்றமும் தண்டனையும்