திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் “காய்கறியும் அரசியலும்” கண்டேன். நீங்கள் கூறிய தொலைப்பேசி கட்டண குறைவு தனியார்மயத்தின் மூலமா அல்லது தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் காத்திருப்பு குறைப்பு தனியார்மயத்தின் பின்பே. என்றாலும், வருங்காலங்களில் திரு ராஜசுந்தரராஜன் கூறிய மாதிரி கீழ்கண்ட விளைவுகள் வருமோ என்பது எனது அச்சமும் கூட
http://news.bbc.co.uk/2/hi/
http://news.bbc.co.uk/2/hi/
http://www.nytimes.com/2008/
( இக் கட்டுரையில் “United Fruit” கூட தாதா தானே? )
அன்புடன்
இராதாகிருட்டிணன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
ரமணர் பற்றி திரு. த.துரைவேல் கடிதம் படித்தேன். உங்கள் கருத்துகளுக்கு சரியான பதில் அளித்துள்ளார்.
சங்கல்பம் ஒரு தளையே. இதன் பொருள் ஒழுங்கற்று இருப்பதல்ல. சங்கல்பம் ‘நான்’ போடும் இன்னொரு வேஷம். ‘நான் இன்மை’ என்ற வேஷத்தைக் கூட ‘நான்’ போடும். சங்கல்பத்தை சுமக்கும் ஒருவருக்கு எப்படி விடுதலை கிட்டும்?
ரமணர் வார்த்தைகளில் வந்துள்ள நூல்களே அவர் கூறியவற்றை தெரிந்து கொள்ள சிறந்த வழி. அந்நூல்களின் வழியாகத் தெரியும் ரமணர் central issue விலிருந்து விலகுவதே இல்லை என்பது தெரியும். பிறர் எழுதியுள்ள நூல்களை மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். அவற்றுக்கு நோக்கம் இருக்கலாம். பிற நூல்கள் மற்றும் அவை பற்றிப் பேசுவது ஒரு வகையான gossip மட்டுமே.
ஜெயலலிதாவை பிராமணர் என்பதால் புகழும் பிராமணர்கள் பற்றி ம.பொ.சி அவர்கள் அது இயற்கை. அதில் தவறொன்றும் இல்லை என்பார். ஜே. கிருஷ்ண முர்த்தியின் சென்னைக் கூட்டங்களில் பரவலாக தெலுங்கு பேசுபவர்களைக்கண்டிருக்கிறேன். நாராயண குரு பற்றி மலையாளிகள் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் சாத்தியமே. திரு துரைவேல் அவர்கள் கூறியதைப் போல் இது ரமணரின் குற்றமல்ல.
ரமணரைப் பற்றி ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள அவரது நூல்களையே நோக்கத்தில் கொள்ளவேண்டும் என நானும் கருதுகிறேன். கருத்து ஏற்படுத்திக் கொள்வது அகடமிக் நோக்கங்களுக்கு உத்வலாம். வாழ்க்கைக்கு ரமணருடன் பயணிப்பதே உதவும்.
மிக நல்ல ஒரு கடிதம் எழுதியுள்ள திரு துரைவேல் அவர்களுக்கு என் நன்றி.
அன்புடன்
வ.ஸ்ரீனினிவாசன்.
****
ஷம்போ மகாதேவா.
எனது இனிய ஜெய மோகன் அவர்களுக்கு,
எல்லாம் வல்ல இறைநிலை உங்களை வளமாக்கட்டும்.
என்னை உங்களுக்கு நினைவிருக்குமா என தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன் உங்கள் வலை தளத்திற்கு எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.
நாம் சானதான தர்ம பணியில் ஈடுபட்டு இருந்தாலும் , அதன் ஒரு பகுதியாக வலை பூ ஒன்றை துவங்கும் எண்ணத்தில் இருந்தோம். இந்த எளியவனின் முயற்சியில் http://gurugeethai.blogspot.
துவக்க நிலையில் உள்ள இந்த தளத்தை படித்து எனக்கு உங்கள் மேலான கருத்தை சொல்வீர்கள் என நினைக்கிறேன்.
108 கதைகள் எழுதும் எண்ணம் உள்ளது. முதலில் நான்கு கதைகளை பதிவேற்றம் செய்துள்ளேன்.
அதிகமான அலுவல் மற்றும் எழுத்து பணி உங்களுக்கு இருக்கும் என தெரிந்தும் இந்த வலை பக்கத்தை படிக்க சொல்லுவதற்கு மான்னிக்கவும். எனக்கு சிறந்த “எழுத்தச்சன்” வேறு யாரையும் தெரியாது.
உங்கள் அன்பன்
ஸ்வாமி ஓம்கார்
*********
திரு ஜெயமோகன்,
‘வசைப்–புரட்சி‘ படிததித்தேன் –
தங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்
தங்களுடைய திடமான மற்றும் சமநோ
அன்புடன்
முரளி
**************
அன்புள்ள ஜெயமோகன்,
மன்னிக்கவும் இதை தமிழில் எழுதமுடியவில்லை. இப்போது என்னிடம் தமிழ் மென்பொருள் இல்லை
உங்கள் ரப்பர் முதல் கொற்றவை வரை நூல்களை படித்து வருகிறேன். உங்கள் எழுத்து நடையால் கவரப்பட்டவன். பல்வேறு உளவியல் தத்துவ அரசியல் கருத்துக்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அசோகவனம் நாவலுக்காகக் காத்திருக்கிறேன்.
உங்கள் பின்தொடரும் நிழலின் குரல் கொற்றவை இரண்டும் நம் பொதுச்சூழலில் சரியானவகையில் படித்து விவாதிக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
தமிழ்ச்சமூகம் இலக்கியபப்டைப்புகள் மீது காட்டும் மௌனம் என்னை வருத்தமுறச்செய்திருக்கிறது. நீங்கள்,எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா [ஸீரோ டிகிரி வாசக ஆராய்ச்சிக்கான தகுதி கொண்டது என்றே நான் நினைக்கிறேன்] மலையாள கன்னட சூழலில் முக்கியமான இலக்கிய படைப்புகள் மிக விரிவாகவே விவாதிக்கப்படுகின்றன. உதாரணம் ‘பருவம்[ [தமிழாக்கம் பாவண்ணன், சாகித்ய அக்காதமி வெளியீடு] புகழ் பைரப்பாவின் புதிய நாவல் பற்றி நடந்துவரும் விவாதத்தைச் சொல்லலாம்.
இப்போது இது ஏன் என்று புரிகிறது.
உதாரணமாக இப்போது விரிவாக விவாதிக்கப்பட்டுவரும் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் பற்றி மலையாள கன்னட இலக்கிய சூழலில் சகரியா, யு ஆர் அனந்தமூர்த்தி போன்றவர்கள் மிக விரிவாகவே கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் உள்பட எல்லா எழுத்தாளர்களும் மௌனமே சாதிக்கிறீர்கள். நீங்கள் உட்பட எந்த எழுத்தாளரும் சமகாலப்பிரச்சினைகளில் ஈடுபடுவதோ வெளிப்படையாகக் கருத்துச் சொல்வதோ இல்லை. ஏன் தமிழ்ச்சமூகம் இலக்கியவாதிகளைப் பற்றி உதாசீனமாக இருக்கிறது என்பதற்கான காரணம் புரிகிறது. அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் முக்கியமான விஷயங்களைப்பற்றி அவர்களிடம் எழுத்தாளர்கள் பேசுவதில்லை. நீங்கள் வெளிப்படையாக இல்லை. ஆகவே அவர்களும் அப்படி இருக்கிறார்கள்
சரிதானே?
ஆர்.பிரபுராம்
அன்புள்ள பிரபு
நீங்கள் சொல்லியிருப்பது போல இலக்கியவாதியின் பணி மக்களை நோக்கி கருத்துக்களைச் சொல்வ்து என நான் நினைக்கவில்லை. இலக்கியத்தின் பணியும் அது அல்ல.நான் எப்போதும் சொல்லிவருவது இதுதான் .நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை மிகச்சிறியது. அதன் சாத்தியக்கூறுகள் குறைவானவை. இலக்கியம் நம் வாழ்வின் சாத்தியங்களை அதிகரிக்கச் செய்கிறது. இன்னும் உக்கிரமான ஒரு வாழ்க்கையை நாம் வாழ வழிவகுக்கிறது. வாழ்க்கையனுபவங்களை- இன்பங்களை மட்டுமல்ல துன்பங்களையும்கூட- செறிவாக்குகிறது. இலக்கிய வாசகனுக்கு வாழ்க்கையில் உள்ள புள்ளிகள் எல்லாம் மேலும் அழுத்தம் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. அதுவே இலக்கியம் செய்ய வேண்டியது. இந்த தேடல் கொண்டவர்கள் சிலரே. அவர்களுக்கு அடிபப்டைக் கல்வியும் பயிற்சியும் தேவை. அதை ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான விழிப்புணர்வே அளிக்க முடியும். அவ்விழிப்புணர்வை அளிப்பது சமூக இயக்கங்கள். கேரள சமூக இயக்கங்கள் , நாராயண இயக்கம் மற்றும் இடதுசாரி இயக்கம், இரண்டுமே அறிவார்ந்தவை. கல்விசார்ந்தவை. ஆகவே அதன் விளைவாக அங்கே எழுத்து மேல் கவனம் வந்தது. இங்குள்ள சமூக இயக்கங்கள் பேச்சு சார்ந்தவை. ஆகவே இன்றும் இங்கே மேடைப்பேச்சே சிறந்த ஊடகம்
நீங்கள் எண்ணுவது உண்மையல்ல. கேரள எழுத்தாளர்களில் ஒரு சிறுசாரார் இலக்கியம் தவிர அரசியல் சமூகவியல் விஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள். பஷீரும்,காரூரும், உறூபும் ஈடுபட்டதில்லை, தகழி ஈடுபட்டார். டி.பத்ம்நாபனும் எம்டி வாசுதேவன்நாயரும் ஈடுபட்டதில்லை. சகரியா ஈடுபடுகிறார். அந்த சதவீதமே மிகக் குறைவு. ஈடுபடுகிறவர்கள் அளவுக்கோ அதைவிட அதிகமாகவோ அரசியல் சமூகவியல் விவாதங்களை தொட்டுக்கூட நோக்காதவர்களும் புகழுடன் இருக்கிறார்கள். அந்த ஈடுபாடு என்பது இலக்கியவாதியின் படிப்பு ஆர்வம் இயல்பு போன்றவற்றைச் சார்ந்தது.
தமிழில் சாரு நிவேதிதா போன்றவர்கள் எல்லாவற்றுக்கும் கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்களே. என்னைப்பொறுத்தவரை நான் எதிர்வினையாற்ற வேண்டுமென்றால் அதில் நான் சொல்வதற்கு சில இருக்க வேண்டும். எழுத்தாளனாக நான் நின்று பேசும் ஒரு தளம் அதில் தேவை. அதுவரை வந்த கருத்துக்கள் தொடாத ஒரு புள்ளி, பார்க்காத ஒரு கோணம். எனக்குச் சொல்வதற்கு தனியாக ஏதுமில்லாத போது சொல்ல முனைவது அதிகபிரசங்கித்தனமாகவே ஆகும். எனக்கு சொல்வதற்கு இருக்கும் தளங்களில் நான் சொல்லாமலிருந்ததே இல்லை.எழுத்தாளன் தன் எழுத்தை முன்வைக்க வேண்டும். அது அவனை கொண்டு சென்றால் போதும்.
இலக்கியமல்லாத துறை சார்ந்த ஒரு ஆளுமையாக அவன் தன்னை முன்வைத்து இலக்கிய கவனம் தேடுவது சரியில்லை. ஒரு இலக்கியவாதி என்ற அடையாளத்துடனேயே அவன் பேசவேன்டும். அவனை விட விஷயம் அறிந்த ஆயிரக்கணக்கானோர் சூழலில் இருக்கலாம் என்பதை அவன் மறக்கவும் கூடாது
ஜெயமோகன்
*********
அன்புள்ள ஜெயமோகன்,
வேதாந்தம் பற்றிய கட்டுரைகள் பாதியில் நிற்பதாக தோன்றுகிறது. இப்போது இவற்றை பற்றிப் பேசுவதற்கு தமிழில் ஊடகங்களே இல்லை. ஆகவே நீங்கள் அவற்றை விட்டாது தொடர்ந்துஎ ழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் கட்டுரைகள் மிக முக்கியமானவை என்று எனக்கு தோன்றுகின்றன. வேதாந்தத்தை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பழைய புராணிக மொழியில் பழமையாக பேசுகிறார்கள். மிச்சமுள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் கற்றவராகவும் தெளிவாக நவீன நோக்கில் சொல்பவராகவும் இருக்கிறீர் என்பது முக்கியமானது. நமது பக்திச் சொற்பொழிவாளர்கள் நீங்கள் எழுதுவதை படிப்பார்கள் என்றால் நல்லது
சண்முகவேல்
சென்னை
*************
அன்புள்ள ஜெயமோகன்,
மலையாள சினிமாக்களை ஷைனா வீடியோஸ் என்ற கடையில் வாங்கலாம் என்று எழுதியிருந்தீர்கள். அது எங்கே இருக்கிறது?சென்னையிலா இல்லை வேறு எங்காவதா?
முருகேசன்
அன்புள்ள முருகேசன்
விலாசம்
Saina vedio vision
22/1 Saidapettai Road
Vadapalani
Chennai 26