ஷண்முகவேல் ஓவியநூல்

நீங்கள் இது பற்றி ஏற்கனவே சிந்தித்து இருக்கலாம்.

முதற் கனலில் உள்ள சித்திரங்கள் அனைத்தையும், ஒரு coffee table book வடிவத்தில் (A3) பிரசுரிக்கலாம். 50 தாள்கள் உடைய புத்தகம் – குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் ஒரு சுலப அறிமுகம். அத்யாயத்தின் ஒரு சிறு பகுதி – படித்தலை தூண்டும் வண்ணம் அச்சிடலாம்.

நண்பர் தினேஷ் பரமசிவம் – வலை தளத்தில் – மேலேற்றி இருக்கிறார் – மனவெழுச்சி தரும் சித்திரங்கள் – ஒரே சமயம் பார்க்கும் போது – இதோ அந்த சுட்டி

http://www.pinterest.com/dineshparamasiv/venmurasu-mudhar-kanal-novel-by-jeyamohan/

மற்றொரு சிந்தனை – தமிழ் தெரியாதவர்கள் கூட வெண் முரசிற்கு அறிமுகம் ஆகலாம் – யாரேனும் தன்னார்வ நண்பர்கள் – வேறு மொழியில் மொழி பெயர்க்கலாம் –

மிகவும் வணிகமய சிந்தனையின் தோற்றத்திற்கு மன்னிக்கவும். நல்ல புத்தகம் மற்றவர்களும் வாசித்தல் மற்றும் காண் அனுபவம் பெறலாமே – என்கிற எண்ணம்.

பாண்டு தன் மக்களுடன் திளைப்பது போல, மழைப்பாடலில் திளைத்து வருகிறேன். சிந்தனைகளையும், நினவோட்டங்களையும், ஒரு புத்தகத்தில் குறித்து வருகிறேன். நீண்ட கடிதமாகி விடுமோ என்கிற பயம் (வெண் முரசின் எழுத்து வேலை மட்டுமே உங்கள் நேரத்தை விழுங்கி விடும் – நீண்ட கடிதங்கள் – தேவையற்ற கவன மாற்றம் என்கிற எண்ணத்தில் பிறிதொரு சமய சந்திப்பில் அனுபவிக்கலாம்)

அன்புடன்

முரளி

அன்புள்ள முரளி,

ஆம் அதைச்செய்யலாம்தான். ஒரு படத்துக்கு ஒரு பக்கம் என கதையை பெரிய எழுத்தில் மட்டும் சுருக்கி குழந்தைகளுக்கான மொழியில் எழுதி 100 பக்க நூலாக வெளியிடலாம். சண்முகவேலின் ஓவியங்கள் பரவலாகச் சென்று சேரும். நாவலுக்கான தொடக்கமாகவும் அமையும். அது ஷண்முகவேலின் நூல். ஆனால் இதன் வணிகசாத்தியங்கள் தெரியவில்லை. பதிப்பாளர் யோசிக்கவேண்டும்.
ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89
அடுத்த கட்டுரைவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்