கனவுநிலம்

வணக்கம்,

புதியகாடு பகுதியின் நிலவியல் வர்ணனைகள் போன்று எங்கும் நான் இதுவரை உணர்ந்தது இல்லை. தனியொரு பூவாக அப்புல்வெளி மலரும் தருணத்தில் அழுகையே வந்துவிட்டது. வர்ணனைகள் எல்லாம் என்னருகே எழுந்து விலகியபடியே இருந்தது. இறுதியாக அந்த பன்னிரு சூர்யதோற்றங்கள் … எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நன்றிகளுடன்
ஷங்கர்

அன்புள்ள ஷங்கர்

அந்த இடம் மாபெரும் இயற்கை மாற்றங்களுக்குப்பின்னும் இன்றுகூட ஒரு கனவுவெளிதான். புஷ்பவதி ஆற்றங்கரையில் உள்ள இச்சமவெளி valley of flowers என அழைக்கப்படுகிறது. உத்தரகண்டின் முக்கியமான பயணத்தலம். ஜெ

ஜெ,

கற்பனையில் சென்று சிலிர்த்து வந்தேன் அர்ஜுனன் பிறப்பு காலத்தில். சுற்றிலும் குழந்தைகளை அமர்த்தி சொன்னால் விரியும் கண்களை மனதில் விரிய வைத்தீர்கள்… வெண் தூசு மழை முடிந்து வானவில் வரும் சமயம் என் எதிரே இந்திரனின் வருகை போல் உச்சம் தொட்டது மனம்,…வெகு நுணுக்கமாய் ஆழமாய் 85, 86 பகுதிகள். கனவுகளின் சொர்க்க உலகம்… வசந்த கால இளமை போல,.கண்கள் பட்டால் காட்சிகள் களையும் என உலகத்தில் இங்ஙனம் சில இடங்கள் இன்றும் இருக்குமோ? இத்தைகைய இடத்தை தேடி அங்கே தன்னை கண்டு வாழும் பாண்டு போல தான் உலகில் இன்னுமும் அலைகிறார்கள்.

சிலவை தோன்றியது…பீஷ்மர் யுகத்தின் மாறுதலை சொல்லும் போதும் கலி கண் திறந்து ஓநாய் படை ஊர் போகும் காலம் யோசித்தால் இவர்கள் எல்லாரும் ஆயிரம் வருட கணக்கில் வாழ்ந்தார்களா? யுகம் என்பது இத்தனை ஆயிரம் வருடங்கள் என்பது வெறும் குறியீடு மட்டும் தானா?

அர்ஜுனன் வந்தாயிற்று. இனி கிருஷ்ணன்??

உங்களின் எல்லி பற்றிய CONTACT கதை விவரணை படித்த பின் கிருஷ்ணன் அங்ஙனம் வந்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. அதில் சொல்லியது போல தூய பிரக்ஞை தோன்ற வேண்டும் என்று முடிவு செய்து தோன்றி, மண்ணில் இறங்கி தான் தான் அது என்று பிறந்த கணம் முதல் தெளிந்து, காட்டி கொள்ளாமல் காலதிற்கேற்ப போட்டு கொள்ளும் முகங்களுடன் எவ்வாறு தன்னில் திளைத்தபடி எதை செய்தாலும் தன் கடமை என்று உணர்ந்து செய்யும் மனம் பெற்றான் எனும் படியாய்…..
வெண்ணை தின்னும் கதைகளில் இல்லாத ஒரு முகத்தை, சித்தரை பௌர்ணமியில் ஒளிர்ந்து தன்னை கண்டு எடுத்த புத்தன் விதமாய்…. ஆழ்ந்து பழகி அர்ஜுனனின் நட்பு கொண்டாலும் ஒட்டாமல் ஒட்டிய அதிசயமாய்….. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் விடாமல் பருகிய இளமை தெறித்த ஞானி வாழ்வாய்…..
பெண், கள், உணவு, ஓட்டம், ஆட்டம், பாட்டம், சிரிப்பு, குறையாத இளமை, தீராத சக்தி, அணையாத தீபம் கொண்டு வாழ்வின் அனைத்து positive களுடன் வாழ்ந்து செல்லும் படியாய்..மற்றும் உங்களின் ஏழாம் உலக உலகில் கூட கூசாமல் வாழ்ந்து அவர்களை விடுத்து மேலேற்றி கொண்டு செல்லும் தேவதுதன் வாழ்வு போல,,,,,
கிருஷ்ணை அனைத்திலும் உச்சமாய், எழுதிய விதங்களில் இல்லாத விதமாய், குலுக்கி போடும் அறம் மற்றும் கோமல் வலி போன்ற உணர்சிகளின் அருவி மற்றும் அறிவின் வெம்மை கலந்து எழுதுங்கள் ….படித்த பின் விடுமுறை எடுத்து ஓடி போக வைக்கும் விதமாய் வர வையுங்கள் கிருஷ்ணனை ….ஒவ்வொரு நாளும் ஒரு அத்யாயம் மட்டும் வருவது என்பது சட்டம் இல்லை அல்லவே??

சொல்ல தெரிய வில்லை.சடென்று தோன்றியது….

எழுத வைத்து கொண்டு இருப்பதற்கும், எழுதிகொண்டு இருப்பதற்கும் வாழ்த்துகள்

லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

ஒவ்வொரு வர்ணனையும் ஒரு படிதான். அதைத் தாண்டுவதன் சவாலை அது உடனடியாக முன்வைத்துவிடுகிறது. பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87
அடுத்த கட்டுரைஊட்டி சந்திப்பு – 2014 [2]