அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
பாலையில் மலர்மரம் வாசித்தேன்.
திரு.தேவதேவன் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகம். இன்னும் அவரின் முழுநூல் படித்ததில்லை. உங்கள் தளத்தில் படித்தது. நீங்கள் சுட்டிக்காட்டிய கவிதைகள். பயணத்தில் விழியில் படும் மலர்போல அங்கங்கே படித்தது கேட்டது மட்டும்தான்.
உங்கள் எழுத்து என்னை கிழித்தது உண்டு, அதன்பிறகுதான் அது கிழிக்கவில்லை விரித்து வைக்கின்றது என்று அறிந்தேன்.
தேவதேவன் கவிதைகள் என்னமோ செய்கின்றன. என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. முழுக்கவிதையைவிட அவர் வார்த்தைகள் என்னை இல்லாமல் செய்கிறது. நான் மறைந்துபோகின்றேன். அவர்சொற்கள் மட்டும்தான் அங்கு தனியாக நிற்கிறது. அது என்ன? அது என்னை என்ன செய்கிறது என்று புரியவில்லை. அது என்னை என்ன செய்கின்றது என்பதை அறிய நான் என்ன செய்யவேண்டும்?
பாலையின் மலர்மரத்திற்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
ராமராஜன் மாணிக்கவேல்
ஜெ,
தேவதேவனைப்பற்றிய கட்டுரை அருமை. பாலையில் மலர்மரம் என்ற தலைப்பு முதல் அக்கட்டுரையிலேயே வரக்கூடிய கவித்துவமான சொல்லாட்சிகள் மனதை மிகவும் கவர்ந்தன.
பூத்தலென்பது அவற்றின் வெளிப்பாடல்ல, அவற்றின் இருப்பே அதுதான்.
அலைகளில் நிலவென தன்னை அழித்தழித்து புனைந்துகொள்பவையுமான இத்தகைய கவிதைகள்
— போன்ற வரிகளை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன்.
எஸ். சிதம்பரம்
தேவதேவனைப்பற்றிய கட்டுரைகள்
கவிதையும் கருணையும் தேவதேவன் படைப்புலகம் – க மோகனரங்கன்
தேவதேவன் மோகனரங்கனின் உரை
தேவதேவன் பற்றி சு யுவராஜன்.
தேவதேவன் பேட்டி
என் கட்டுரைகள்
தேவதேவனின் கவித்தரிசனம்
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனும் நானும்
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி
தேவதேவனின் பித்து
கவிஞர்கள் முன் விமர்சிப்பதுபற்றி