லோகித தாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்டிவாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் . 10.5.1955 ல் பிறந்தார். 28.6.2009ல் இறந்தார்.
திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராக பணியாற்றினார்.
ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் லோகி எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி [கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்]க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது [சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு] என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி [அவசானம் வந்த அதிதி ] கனவு விதைத்தவர்கள் [ஸ்வப்னம் விதச்சவர்] போன்ற நாடகங்களையும் எழுதினார்
நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது.1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி.
லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.
லோகி கீழ்க்கண்ட திரைப்பட விருதுகளை பெற்றிருக்கிறார்
.திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987
நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997
மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997
மிகச்சிறந்த திரைக்கதைக்கான ·பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள்
தனியாவர்த்தனம் [1987]
தசரதம் [1989]
கிரீடம் [1990]
பரதம் [1991]
செங்கோல் [1993]
சகோரம் [1994]
சல்லாபம் [1994]
தூவல்கொட்டாரம் [1996]
பூதக்கண்ணாடி [1997]
ஓர்மச்செப்பு [1998]
ஜோக்கர்[ 1999]
வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000]
கஸ்தூரிமான் [2003]
நிவேத்யம் [2007]
மிகச்சிறந்த திரைப்படத்துக்கான ·பிலிம் கிரிட்டிக்க்ஸ் அசோசியேஷன் விருது
பூதக்கண்ணாடி [1997]
ஜோக்கர்[ 1999]
கஸ்தூரிமான் [2003]
நிவேத்யம் [2007]
லோகிததாஸ் திரைக்கதை எழுதிய படங்கள்
1987 தனியாவர்த்தனம்
1987 எழுதாப்புறங்ஙள்
1988 குடும்பபுராணம்
1988 விசாரண
1988 முக்தி
1989 கிரீடம்
1989 ஜாதகம்
1989 தசரதம்
1989 முத்ர
1989 மஹாயானம்
1990 சஸ்னேகம்
1990 மாலயோகம்
1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா
1990 குட்டேட்டன்
1991 தனம்
1991 பரதம்
1991 அமரம்
1991 கனல்காற்று
1992 வளையம்
1992 கமலதளம்
1992 ஆதாரம்
1992 கௌரவர்
1993 வெங்கலம்
1993 செங்கோல்
1993 வாத்ஸல்யம்
1994 சகோரம்
1994 சாகரம் சாட்சி
1995 ஸாதரம்
1996 சல்லாபம்
1996 தூவல்கொட்டாரம்
1997 பூதக்கண்ணாடி
1997 காருண்யம்
1998 ஓர்மசெப்பு
1998 கன்மதம்
1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள்
1999 அரயன்னங்ஙளுடே வீடு
2000 ஜோக்கர்
2001 சூத்ரதாரன்
2003 கஸ்தூரிமான்
2003 சக்ரம்
2006 சக்கரமுத்து
2007 நிவேத்யம்
லோகிததாஸ் இயக்கிய படங்கள்
1997 பூதக்கண்ணாடி
1997 காருண்யம்
1998 ஓர்மச்செப்பு
1998 கன்மதம்
2000 அரயன்னங்களுடே வீடு
2000 ஜோக்கர்
2001 சூத்ரதாரன்
2003 கஸ்தூரிமான்
2003 சக்ரம்
2005 கஸ்தூரிமான் [தமிழ்]
2006சக்கரமுத்து
2007 நைவேத்யம்
லோகிததாஸ் நடித்த படங்கள்
1992 ஆதாரம்
1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள்
2002 ஸ்டோப் வயலன்ஸ்
2005 தி காம்பஸ்
2005 உதயனாணு தாரம்
லோகிததாஸ் தயாரித்தபடம்
2005 கஸ்தூரிமான் [தமிழ்]
லோகிததாஸ் பாடல் எழுதிய படங்கள்
2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’
2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’
2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி
2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ