அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு மறுப்பு

நண்பர் அரவிந்தன் கன்னையன் அரவிந்தன் நீலகண்டனுக்கு விரிவான ஒரு மறுப்பை அவரது தளத்தில் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் இருப்பதனால் அதை முழுமையாக இங்கே எடுத்து அளிக்கவில்லை– இது தமிழ்த்தளம். திரு அரவிந்தன் கன்னையன் அவர்கள் தமிழில் எழுதவேண்டுமென பல காலமாகக் கோரிவந்திருக்கிறேன். இம்முறையும் அக்கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன்.

*

அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் எனக்கான மறுப்பு. அதற்கு ஒரு விரிவான மறுப்பை அளிக்க நான் விரும்பவில்லை. இந்துத்துவ அறிவியக்கம் நான் சொல்லிய குற்றச்சாட்டுகளை இந்தத் தளத்தில் முன்னர் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில்தான் சொல்கிறேன் என ஒரு தொடர்வாசகன் அறிந்துகொள்ளமுடியும்.

அரவிந்தன் சொல்வதுபோல உண்மையிலேயே ஓர் இந்துத்துவ அறிவியக்கம் இருந்தால்கூட அது முதலில் சந்திக்கும் எதிர்ப்பு பெருவாரியான இந்துத்துவர்களிடமிருந்துதான். சீதாராம் கோயலும் கெயின்ராட் எல்ட்ஸும் அதைத்தான் சந்தித்தார்கள். அதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ராமர்பாலம் பற்றிய விவாதத்திலும், சந்திரசேகர சரஸ்வதி விவாதத்திலும் அரவிந்தன் நீலகண்டனே அதை நேரில் உணர்ந்திருப்பார். அவர் கிறித்தவ ஐந்தாம்படை என்றே குற்றம்சாட்டப்பட்டார் [அவரது மனைவி கத்தோலிக்க கிறித்தவர், கிறித்தவராகவே நீடிப்பவர் என்பதனால்]

இந்தச்சிக்கல் வாக்கு அரசியலை கையாளும் ஒரு கட்சிக்கும் அதன் சித்தாந்த அடிப்படைக்குமான முரண்பாடு அல்ல. உண்மையில் சித்தாந்தத்துக்குப் பதில் பழமையான நம்பிக்கைகளை மட்டுமே இறுகப்பற்றியிருக்கக்கூடிய ஒரு பேரமைப்பின் பெருவாரியான உறுப்பினர்களுக்கும் ஒரு பொதுச்சித்தாந்தத்தை கட்டி எழுப்ப முயலும் அறிவுஜீவிகளுக்குமான முரண்பாடு. அவர்கள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டே வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

ஜெ

சுட்டிக் கட்டுரைகள் கயா விவாதம்

1. கயா

2 கயா கடிதங்கள்

3 கயா ஒரு கடிதம்

4 கயாவும் தர்மஸ்தலாவும்

5 கயாவும் இந்துக்களும்

6 கயா மேலுமொரு கடிதம்


7 கயாவில் என்ன நிகழ்ந்தது?


சுட்டிக்கட்டுரைகள் எம் எஃப் ஹுசெய்ன்

ஹுசெய்ன் கடிதங்கள்

தேவியர் உடல்கள்
ஹூசேய்ன் கடிதங்கள்
ஹூசெய்ன் இந்துதாலிபானியம்
எம் எஃப் ஹுசெய்ன்


சுட்டிக்கட்டுரைகள் இந்துத்துவம்


கிறித்தவர்கள் மீதான தாக்குதல்கள்


இந்துத்துவம் ஒரு கேள்வி


இந்துத்துவம் கிறித்தவம் கேள்விகள்

இந்துத்துவம் மோதி ஒரு கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63