நூஹ் நபிக்கு வழங்கப்பட்ட வேதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணவிற்கு,

இந்துமதத்தைப் பற்றி மிகமோசமாக நினைத்திருந்தேன்.ஆனால் அது நூஹ் நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தில் இருந்து திரிபடைந்த மதம்.இனி ராமர்,கிருஷ்ணர் போன்றவர்களை நான் விமர்சிக்கப்போவதில்லை.அவர்கள் முன்னர் அனுப்பப்பட்ட இறைதூதர்களாக இருக்கக் கூடும்.இறைதூதர்களை அவமதித்தால் நரகம்தான்.திரிபுகளை மட்டுமே இனி சுட்டிக்காட்டுவேன்.அபூ ஆஸியா என்றொரு அறிஞர் ஆராய்ந்து எழுதியுள்ள புத்தகத்தை வாசித்தேன்.அதை உங்களுக்கு வாசிக்கத்தரவேண்டும் என்று வைத்திருந்தேன் வேறொரு நண்பர் எடுத்துச் சென்றுவிட்டார்.அவர் வாசித்தபின்னர் தருகிறேன் என்று முஸ்லிம் நண்பர் ஒருவர் கூறியிருந்தார்.அந்த நூல் வாசிப்பதற்கு கிடைக்கவில்லை.அதை எடுத்துச்சென்றவர் அதைத் தொலைத்துவிட்டார்.நண்பருக்கு கவலையாகிவிட்டது.புதிய நூல் வாங்கி தருவேன் என்றார்.ஆனால் அவருக்கு வேறு பிரதி கிடைக்கவில்லை.இது நடைபெற்று ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு மதத்தின் நம்பிக்கைகளை வைத்து இன்னுமொரு மதத்தை அளவிடுவதென்பது திண்மப்பொருட்களின் நிறுத்தலுக்கு பயன்படும் அளவீடுகளை(Kg,g…போன்ற) திரவத்தை அளக்கபயன்படுத்துவது போன்று அர்த்தமற்ற செயலாகிவிடக்கூடும்.எனினும் நண்பரைப்போன்ற மதநம்பிக்கையை மட்டுமே மையமாகக்கொண்டு வேறு சிந்தனைகளில் பெரிதளவுக்கு பழக்கமற்ற ஒருவருக்கு இவ்வாறான ஆய்வுகள் மற்றைய சமூகங்களை மன இணக்கத்துடன் அணுகுவதற்கு வழிவகுக்குமாயின் அதுதான் இதனால் கிடைக்கக்கூடிய ஒரெயொரு நன்மையாக இருக்குமென எண்ணிக்கொண்டேன்.

நண்பர் கூறியிருந்த நூலின் பிரதி தற்செயலாக இணையத்தில் கிடைத்தது.ம்ம்ம்…தெய்வநாயகம்,தேவகலா ஆய்ய்ய்..வு வகையறாதான்.படித்து இன்புறுக.

http://www.islamicbook.ws/tamil/tamil-35.pdf

சிவேந்திரன்

முந்தைய கட்டுரைசிவகாசி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71