மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன். தரமான பொழுதுப்போக்குத்தன்மை, சமூக விமரிசனத்தன்மை உணர்ச்சிகரத்தன்மை ஆகியவற்றை நான் அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன்.

இவற்றை திரும்பிப் பார்க்கும்போது மலையாளப்படங்களில் முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களின் பங்களிப்பு பிரமிக்கச் செய்வதாக இருப்பதைக் காண்கிறேன். முக்கியமாக எம்.டி.வாசுதேவன் நாயர். மலையால திரையுலகின் முதல் நாயகன் அவரே. அரை நூற்றாண்டுக்காலமாக அவர் மலையாளத்தில் மிக வலுவான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். அவை காலம்கடந்தும் ரசனையில் வாழ்கின்றன. மலையாள திரை ரசனையையே அவர் வடிவமைத்தார் என்று சொல்லலாம்

மலையாள சினிமா என்பது கேரள இடதுசாரி இயக்கத்தின் உருவாக்கம் என்று தயங்காமல் சொல்லலாம். கம்யூனிஸ்டுகள் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டதனாலேயே திரை ரசனை வளர்ந்தது. இயக்குநர்கள் பி.பாஸ்கரன்,  எழுத்தாளர் தகழி, பஷீ£ர், தோப்பில் பாஸி, ஷெரீ·ப், உறூப்,  டி தாமோதரன்,இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன், தேவராஜன்,பாபுராஜ், பாடலாசிரியர்கள் வயலார் ராமவர்மா போன்ற ஆரம்பகால திரைப் படைப்பாளிகள் அனைவருமே இடதுசாரிகள்தான். எம்.டி.வாசுதேவன் நாயரும் இடதுசாரி இயக்கத்திலிருந்து வந்தவரே.

இடதுசாரி இயக்கம் ஐம்பதுகளில் கிராமங்களிலேயே ரசனையையும் வாசிப்பையும் உருவாக்கியது. கிராமப்புற நூலகங்கள் பல்லாயிரக்கணக்கில் தொடங்கபப்ட்டன. அங்கே கலைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை பயில்முறை நாடகங்களை உருவாக்கின. அந்நாடகங்களில் பெரிய படைப்பாளிகள் பங்கு கொண்டார்கள். டி.தாமோதரன்,ஷெரீ·ப், உறூப்,பி.பாஸ்கரன், வயலார், தேவராஜன் எல்லாமே அங்கிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே. இவ்வாரு கேரள மக்களின் ரசனையில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்ரமே எழுபதுகளில் சினிமாவில் வளர்ச்சிகொண்டது.

மலையாள சினிமாவின் தொடக்கம் முதல் உறூப், தகழி, பஷீர் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால்தொண்ணூறுகளுக்குப் பின் திரையில் சாதனை படைத்த எழுத்தாளர்கள் எவரும் இல்லை. இலக்கியம் அறிந்த திரை எழுத்தாளர் என்ற இடம் ஸ்ரீனிவாசன், லோகித் தாஸ¤க்குப் பின்னர் காலியாகவே இருக்கிறது.

***
ராமுகாரியட்

செம்மீன் [தகழி]
முடியனாய புத்ரன்

பி.பாஸ்கரன்

ராரிச்சன் எந்ந பௌரன்
மூலதனம் [டி.தாமோதரன்]
கள்ளிசெல்லம்மா [ஜி.விவேகானந்தன்]
நீலக்குயில் [ உறூப்]
உம்மாச்சு [உறூப்]
இருட்டின்றே ஆத்மாவு [எம்.டி.வாசுதேவன்நாயர்]

கெ.எஸ்.சேதுமாதவன்

அடிமகள் [தகழி]

சட்டக்காரி [பம்மன்]

துலாபாரம் [கெ.பி.கொட்டாரக்கரா]
ஓடயில்நிந்நு [பி.கேசவதேவ்]
அனுபவங்ஙள் பாளிச்சகள் [தகழி]
நட்சத்ரங்ஙளே காவல் [பி.பத்மராஜன்]
ஒருபெண்ணின்றே கத[என்.மோகனன்]
கரகாணாக்கடல் [முட்டத்து வர்க்கி]
தேவி[பி சுரேந்திரன்]
நீலத்தாமர [எம்.டி.வாசுதேவன்நாயர்]
வாரிக்குழி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அசுரவித்து [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓப்போள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
முறப்பெண்ணு [[எம்.டி.வாசுதேவன்நாயர்]]
என்.என் பிஷாரடி

நிணமணிஞ்ஞ கால்பாடுகள் [பாறப்புறத்து]
ஏ.வின்செண்ட்

அஸ்வமேதம் [தோப்பில் பாசி]
திரிவேணி
பார்கவிநிலையம் [பஷீர்]
யட்சி [மலையாற்றூர் ராமகிருஷ்ணன்]

ஹரிஹரன்

அமிர்தம்கமய[எம்.டி.வாசுதேவன்நாயர்]

ஒரு வடக்கன் வீரகதா[எம்.டி.வாசுதேவன்நாயர்]

பஞ்சாக்னி [எம்.டி.வாசுதேவன்நாயர்]

நகக்ஷதங்ஙள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி எம்.டி.வாசுதேவன்நாயர்]

பரிணயம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
பி.என் மேனோன்

குட்டியேடத்தி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓளவும் தீரமும் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
காயத்ரி [சி.ராதாகிருஷணன்]

எம்.டி.வாசுதேவன் நாயர்
நிர்மால்யம்
மஞ்š
கடவு

பவித்ரன்

உத்தரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

உப்பு
தோப்பில்பாஸி

சரசய்யா
நிங்கள் என்னெ கம்யூனிஸ்டாக்கி

ஐ.வி.சசி

உத்சவம் [ஷெரீ·ப்]
இனியும் புழ ஒழுகும்
ஆறாட்டு
திருஷ்ண
ஈநாடு[டி.தாமோதரன்]
ஆரூடம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஆவநாழி[டி.தாமோதரன்]
மிருகய[லோகித்தாஸ்]
கரும்பின் பூவின் அக்கரே [பி.பத்மராஜன்]
இதா இவிடவரே [பி.பத்மராஜன்]
அவளுடே ராவுகள் [ஷெரீ·ப்]
ஆள்கூட்டத்தில்தனியே [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அபிநந்தனம் [ஷெரீ·ப்]
ஈற்றா[ஷெரீ·ப்]
இடவழியிலே பூச்ச மிண்டாபூச்ச [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சதனம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சுகுருதம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
தேவாசுரம்[ரஞ்சித்]
பரதன்

பிரயாணம் [பி.பத்மராஜன்]
லோறி[[பி.பத்மராஜன்]
சாட்ட[பி.ஆர் நாதன்]
ஓர்மைக்காய் [ஜான் போல்]
தகர [பி.பத்மராஜன்]
ரதிநிர்வேதம் [பி.பத்மராஜன்]
காதோடுகாதோரம்[ ஜான் போல்]
சாமரம்[ஜான்போல்]
ஒரு மின்னாமினுங்ஙின்றே நுறுங்ஙு வெட்டம் [ ஜான் போல்]
வெங்கலம்[லோகித்தாஸ்]
வைசாலி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
தாழ்வாரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அமரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

பி.பத்மராஜன்

தேசாடனபட்சி கரயாறில்ல
தூவானத்தும்பிகள்
கள்ளன் பவித்ரன்
ஒரிடத்தொரு பயில்வான்
அபரன்
அரப்பட்ட கெட்டிய கிராமத்தில்
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்
நொம்பரத்திப்பூவு
பெருவழியம்பலம்
மூநாம்பக்கம்
மோகன்

சாலினி என்றெ கூட்டுகாரி [பி.பத்மராஜன்]
இடவேள [பி.பத்மராஜன்]
முகம்
தீர்த்தம்
விடபறயும் மும்பே

ஜோஷி

தினராத்ரங்ஙள் [ஜான் போல்]
நிறக்கூட்டு [ஜான் போல்]
சியாம [ஜான் போல்]கௌரவர் [லோகித் தாஸ்]
கெ.ஜி.ஜார்ஜ்

உள்கடல்
யவனிக
ஆதாமிண்டே வாரியெல்லு
இரகள்
மேள
ஈகண்ணிகூடி
மற்றொராள்
அடூர் கோபாலகிருஷ்ணன்

சுயம்வரம்
எலிப்பத்தாயம்
கொடியேற்றம்
முகாமுகம்
மதிலுகள்

நெடுமுடிவேணு

பூரம்
·பாசில்

மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்
என்றே மாமாட்டிக்குட்டியம்மைக்கு
மணிச்சித்ரத்தாழ்

அரவிந்தன்

ஒரிடத்து
சிதம்பரம்
தம்பு
சிபி மலையில்

தனியாவர்த்தனம் [லோகித தாஸ்]
கிரீடம் [லோகித தாஸ்]
செங்கோல்[லோகித தாஸ்]
கமலதளம்[லோகித தாஸ்]
பரதம்[லோகித தாஸ்]
சதயம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

சத்யன் அந்திக்காடு

டி.பி.பாலகோபாலன் எம்.ஏ [ஸ்ரீனிவாசன்]
ஸ்ரீதரன்றே ஒநாம் திருமுறிவு [ஸ்ரீனிவாசன்]
பொன்முட்டயிடுந்ந தாறாவு [ஸ்ரீனிவாசன்]
சந்தேசம் [ஸ்ரீனிவாசன்]
மழவில்காவடி[ஸ்ரீனிவாசன்]
வரவேல்பு[ஸ்ரீனிவாசன்]
சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்[ஸ்ரீனிவாசன்]

மிதுனம்[ஸ்ரீனிவாசன்]

ஷாஜி என் கருண்

பிறவி
லெனின் ராஜேந்திரன்

மீனமாசத்திலே சூரியன்
வேனல்
சுவாதிதிருநாள்

யு.கெ.குமாரன்

இனியும் மரிச்சிட்டில்லாத்த நம்மள்
அதிதி

பி.ஏ.பக்கர்

சாப்ப
மணிமுழக்கம்
அஜயன்

பெருந்தச்சன்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
பாலுமகேந்திரா

ஓளங்ஙள்
யாத்ரா
பாலசந்திரமேனோன்

மணியன்பிள்ள அதவா மணியன் பிள்ள
அச்சுவேட்டன்றே வீடு
லோகித் தாஸ்

பூதக்கண்ணாடி
சூத்ரதாரன்

டி.வி,சந்திரன்

டானி

கமல்

கைக்குடந்ந நிலாவு
பெருவண்ணாபுரத்தே விஸேஷங்கள்
மிழிநீர்பூவுகள்
கிருஷ்ணகுடியில் ஒருபிரணைய காலத்து

தூவல் கொட்டாரம்[லோகித் தாஸ்]
ஸ்ரீனிவாசன்

வடக்குநோக்கி யந்த்ரம்
சிந்தாவிஷ்டயாய சியாமளா

கெ.சுகுமாரன்

பாதமுத்ர

சியாமபிரசாத்

அக்னிசாட்சி

ஜெயராஜ்

வித்யாரம்பம் [ஸ்ரீனிவசன்]
குடும்பசமேதம்
தேசாடனம் [மாடம்பு குஞ்சுகுட்டன்]
களியாட்டம்[மாடம்பு குஞ்சுகுட்டன்]

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

மலையாள சினிமா கடிதங்கள்

முந்தைய கட்டுரைதவசதாரம்
அடுத்த கட்டுரைகவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்