திருவனந்தபுரத்தில்…

நாளை, 25-11-2009 அன்று திருவனந்தபுரத்தில் ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் பேசுகிறேன். ஜேக்கப் தாமஸ் எழுதிய ‘மரங்களுக்கிடையே ஒரு மொனாஸ்டிரி’ என்ற நாவலின் வெளியீட்டுவிழா. இடம் திருவனந்தபுரம் பிரஸ்கிளப். நேரம் மாலை ஐந்துமணி. பிரஸ் கிளப் திருவனந்தபுரத்தில் புதிய செகடரியேட்டுக்குப் பின்பக்கம் உள்ளது.

 நான் இதுவரை இந்தியாவிலும் பிறநாடுகளிலும் பல்வேறு நகரங்களில் உரையாற்றியிருக்கிறேன். ஆனால் என் முன்னோர் தங்கள் தலைநகரமாகக் கண்டிருந்த, ஒருவகையில் என்னுடைய சொந்த நகரமான, திருவனந்தபுரத்தில் இன்றுவரை உரையாற்ற நேரவில்லை. திருவனந்தபுரத்தின் கலை இலக்கிய உலகுடன் நேரடியான தொடர்புகள் இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்

 என்னுடைய நல்ல வாசகரான ஜேக்கப் கட்டாயப்படுத்தினார். அவருக்கு என் எண்ணை எனது வாசகியாகிய ரம்யா அளித்தாள் என்றார். ஆனால் இப்போதும் ஒரு தயக்கம். என்னவென்றால் எனக்கு மலையாளம் பாதி மறந்துவிட்டது. வாயில் மலையாளம் வருவதற்கு கொஞ்சம் தாமதிக்கும். நடுநடுவே தஞ்சைச் செந்தமிழ் வந்து கலக்கும்.

 கலைமகளை கூடவே கொண்டுசெல்லவேண்டியதுதான்.

முந்தைய கட்டுரைவந்தேமாதரம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்