அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் தரத்தை மேம்படுத்துவது பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவு செய்துள்ளது.
2007 ஆண்டுக்கான நெய்தல் விருது கண்மணி குணசேகரனுக்கு வழங்கபப்ட்டது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கபப்டுகிறது. அந்த படைப்புகள் படைப்புரீதியாக வலுவாக இருப்பதுடன் சூழலில் ஆரோக்கியமான வளார்ச்சியை ஊக்குப்பதாகவும் இருப்பது கூடுதலான தகுதியாகக் கொள்ளப்படும் .
40 வயதுக்கு உட்பட்ட தமிழ் படைப்பாளில்கள் இவ்விருதுக்கு பரிசீலிக்கபப்டுவார்கள் .இவர்கள் படைப்புத்துறையில் தீவிரமாக இயங்கிவருபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு தகுதியான பெயர்களை பரிந்துரைக்குமாறு நெய்தல் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.பரிந்துரைக்கான காரணங்களை சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
2008 ஆகஸ்ட் இறுதிக்குல் பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு நெய்தல் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. இந்த பரிந்துரைகளை கணக்கில் எடுத்துகொண்டு நடுவர் குழு பரிசுக்குரிய படைப்பாளியை தேர்ந்தெடுக்கும்.
நடுவர் குழு சுகுமாரன், பாவண்ணன், அரவிந்தன் விருதில் பாராட்டுபத்திரமும் ரூபாய் 10000 ரொக்கபரிசும் அடங்கும்
2008அக்டோபர் மாதம் நடக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கபப்டும்.
தொடர்புக்கு
நெய்தல் கிருஷ்ணன்
kirishnan
saravana illam
ithamozhi salai
kottaaru
nagercoil
629002
ph 9443153314