அன்புள்ள ஜெ,
நான் இரண்டு முறை அண்ணா ஹசாரே இயக்கத்தின் பொழுது போராடி “detain” செய்யபட்டுளேன் .மூன்று வருடம் ஒரு இயற்கை வேளாண் NGO வில் கேரளாவில் வேலைபார்த்துள்ளேன். ஆதலால் எனக்கு NGO எப்படி வேலை செய்யும் என்று தெரியும் அவர்களில் சிலர் மட்டுமே சமநிலை உள்ளவர்கள். நிறைய NGO ஆட்களை இநதியா முழுதும் தெரியும். அவர்கள் மீது வெறுப்பு இல்லை ஆனால் கேள்விகள் ஏராளம் ?
அங்கு நீங்கள் கேள்விகள் எல்லாம் கேட்க முடியாது , அது ஒரு போலிட்பீரோ மாதிரிதான் செயல் படும், அவர்கள் இந்தியா பற்றிய முன்முடிவுடன் இயங்குகிறார்கள் . அங்கும் படித்தவன் என்றால் குருட்டாம்போக்கில் சிந்திக்க தெரிந்தவன் என்று நம்பி விடுவார்கள் . வெறும் மனப்பாட வாசகங்களை தவிர பெரிய அளவில் இந்தியாவின் மீது இவர்களுக்கு மதிப்பு கிடையாது . வெறும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி இயங்குபவர்கள்தான் ஏராளம்
நான் வெகுநாள் தாடி வெச்சு சுற்றிக்கொண்டு இருந்தேன் , அப்பொழுது ஒருவர் நீங்கள் மாவோயிஸ்ட் மாதிரி இருக்கிறீர்கள் என்று கூறினார்.அவருக்கு மாவோயிஸ்ட்கள் மீது ஒரு பற்று உண்டு என்று தெரியும் . அருந்ததி ராயின் பேத்தல்களை வேத வாக்காக என்னிடம் ஒப்பிப்பார் . என்னை கருத்து கேட்டுகொண்டே இருப்பார். அவர் கருத்தை மூர்க்கத்தனமாக வாதாடி கொண்டே இருப்பார் . போராடி போராடி சமநிலை இல்லாமல் , எந்த விசயத்துக்கு முற்போக்கு சாயம் இருந்தாலும் அதனை நம்பிவிடுவார்.ஒரு மதவாதி அளவிற்கு மூர்க்கத்தனம் இருக்கும் வார்த்தைகளில் . தன்னுடன் இல்லை என்றால் தனக்கு எதிரி என்ற எண்ணம் அவர்களுக்குள் ஊறிவிட்டது .
இந்தியா முழுதும் இவர்களின் கைகள் விரிந்துள்ளன. இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நிறைய உண்டு . ஒரு “closed network” என்றே நான் அவர்களை அழைப்பேன் . ஒரு சில சித்தாந்தத்திற்கு ஆள் திரட்டு மற்றும் மூளை சலவை அதுவே அவர்களில் பெரும்பாலோர் எண்ணம் .
அண்ணா ஹசாரே இயக்கத்தின் பொழுது அங்கு உள்ள உள் வட்டத்தின் விளிம்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் இதை பகிர்ந்துகொள்ள கடமை பட்டுளேன் .
இப்பொழுது கேஜ்ரிவாலுடன் இருப்பவர்கள் அப்பொழுது இந்த அளவில் அண்ணா ஹசாரே இயக்கத்தின் பொழுது பங்குகொள்ள வில்லை என்பது தமிழ் நாடு அளவில் பார்த்துள்ளேன் . இப்பொழுது கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பவர்களில் முக்கால்வாசி பேர் NGO சார்ந்த இந்த closed network க்கை சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பேச்சுகளில் இருந்து தெரிகிறது . காஷ்மீரை பொறுத்த மட்டில் கேஜ்ரிவாலும் – அருந்ததி ராயும் ஒரே கோட்டில் தான் இருக்கிறார்கள் .
எனது facebook ல் இருக்கும் நண்பர்களில் இப்பொழுது ஆம் கட்சிக்கு ஆதரவு தருபவர்களில் தொண்ணூற்றி ஒம்பது சதவீதம் அண்ணா ஹசாரே அமைப்பின் போராட்டம் பொழுது பங்கு கொள்ள வில்லை. அதைப்பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு NGO அமைப்பின் அங்கம் . இப்பொழுது இந்த அரசியல் இயக்கத்தில் சேர்பவர்கள் முக்கால்வாசி பேர் NGO அமைப்புகளை சேர்ந்தவர்கள் .அவர்களின் மனப்பாட மழுப்பல்கள் எனக்கு தெரியும் என்றவகையில் கூறுகிறேன் . அவர்களின் சமநிலை பற்றி எப்பொழுதுமே எனக்கு கேள்விகள் ஏராளம் . அவர்களின் இந்திய மரபு எதிர்ப்பு எனக்கு நன்றாகவே தெரியும்
இந்திய மரபின் சில பின்தங்கிய விசயங்களை மட்டும் தெரிந்து கொண்டு எப்பொழுதுமே ஒரு பேரழிவு எதிர்நோக்கி கனவு காணும் மனம் அவர்களில் பலருடன் உரையாடியவன் என்ற வகையில் கூறுகிறேன் . எங்கு ஒரு சிறு பிசகல் நடந்தாலும் , பொத்தம் பொதுவாக இந்திய ஒரு உருப்படாத ஹிந்து மேலாதிக்க நாடு , இங்கு உள்ளவர்கள் அவர்களின் மதத்தை விட்டால் ஒழிய ஒன்றும் இயலாது என்று பேசுபவர்கள் ஏராளம் . அதனை ஒட்டியே அவர்களுக்கு நிதி உதவி , conference , ஒரு அறிவு ஜீவி அந்தஸ்து எல்லாம் கிடைக்கிறது
இதில் நேர்மையாக போராடுபவர்களும் இந்த கூறப்படாத நீதிக்கு அடங்குபவர்களே . இதை எதிர்த்தால் ஒதுக்கிவிடுவார்கள் .உங்களை “மத வாதி ” என்று கட்டம் கட்டுவார்கள் , அவர்களின் பக்கம் இழுக்க இதுவே யுக்தி , இதில் விழுந்தவர்கள் அவர்களின் மனசாட்சியை ஆழத்தில் புதைத்தவர்களே . இயற்கையாக அவர்களுக்கு மாவோயிஸ்ட் மீது ஒரு ரகசிய பிரேமை உண்டு . இல்லாவிட்டால் ஒரு பேரழிவை எதிநோக்க முடியாதே . இதில் சில நேர்மையானோர் உண்டு . அவர்களின் செயல்களில் இருந்தே அது வெளிப்படும் . இந்த தப்புகளை சுட்டி காட்டியதால் வசை பாடியவர்கள் உண்டு . விவாதம் என்றால் அது இடது சாரிகளே வெல்லமுடியும் அது இல்லாமல் யாராவுது எதிர் கருத்து வைத்தால் ஒன்று வசை , இல்லாவிட்டால் நீ இன்னும் வளரனும் உனக்கு ஒன்னும் புரியல என்று ஒற்றை படை விலகல் , மௌனம் . அப்படியே ஒதுக்கி விடுவார்கள் .
ஆனால் என்னளவில் நான் இப்படி எனது கருத்துக்களை வகுத்துகொண்டுள்ளேன் , ஊழலுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சியாக மட்டும் கேஜிரிவாலின் கட்சியை பார்ப்பேன் . அவர்களின் வெளிஉறவு , பாதுகாப்பு, காஷ்மீர் , வட கிழக்கு கொள்கை , மனப்பாட செகுலரிசம் போன்ற சமநிலை இல்லாத கருத்துக்களை விவாதம் மூலம் , பொது கருத்து எதிர்ப்பு மூலமே எதிர்கொள்ள வேண்டும் . இன்னும் பத்து வருடங்களில் ஆம் ஆத்மி கட்சி நன்றாக வரவேண்டும் , எப்படி பா ஜ க காங்கிரசை எதிர்கொள்கிறதோ , அது போன்று ஆம் ஆத்மி எதிர் நோக்கும் என்பது ஒரு ஜனநாயகத்தின் மீது ஆசை கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் .
ஆனால் இபோழுது தேவை ஒரு நிலையான ஆட்சி அதை ஆம் ஆத்மி தர இயலாது , வெளிஉறவில் ஒரு கறாரான இந்தியா தேவை . ஆம் ஆத்மி கட்சியினரிடம் நான் கேட்டுக் கொள்ளும் விஷயம் இதுதான் , மறுபடியும் நாம் ஒரு விவாதம் இல்லாத கட்சியை , ஒரு மனப்பாட மழுப்பல்கள் இருக்கும் கட்சியை உருவாக்க வேண்டுமா , இல்லை ஒரு விவாதம் மூலம் இயங்கும் கட்சியாக இருக்க வேண்டுமா . விவாதம் வேண்டும் என்றல் வெறும் ஊழல் மட்டும் போதாது . மொழி சலவையும் ஊழல் தானே ?
நன்றி
லக்ஷ்மி நரசிம்மன் ( லட்சின்)