காந்தாரமும் தமிழகமும்

அன்புள்ள ஜெ,

மழைப்பாடலில் இரு ஐயங்கள். அதில் பீஷ்மர் காந்தாரம் செல்லும் வழியில் மொகஞ்சதாரோ – இறந்தவர்களின் நகரம் – வழியாக அதைப் பார்த்துக்கொண்டு செல்வதைப்போல எழுதியிருக்கிறீர்கள். மொகஞ்சதாரோ சர் ஜான் மார்ஷலால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அறியப்பட்டிருந்ததா? காந்தார மன்னர்களும் தமிழக மூவேந்தர்களும் ஒரே வம்சாவளியினர் என்று ஒரு செய்தி போகிறபோக்கில் வருகிறது. இதற்கு ஏதாவது தொன்ம ஆதாரம் உண்டா? இல்லை கற்பனையா?

சிவம்

அன்புள்ள சிவம்,

மொகஞ்சதாரோ – இறந்தவர்களின் நகரம் – என்ற பெயரை சூட்டியவர் ஆங்கிலேய ஆய்வாளர்கள் அல்ல. அப்பெயர் பல்லாயிரமாண்டுகளாக அங்கே புழங்கிய பெயர். அதுவே ஆதாரம்.

அக்னிபுராணத்தில் காந்தார மன்னர்களின் வம்சாவளியில்தான் சேர சோழ பாண்டியர்களும் வருகிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. அதை அப்படியே சொல்லியிருக்கிறேன். மகாபாரதத்தின் பிரக்‌ஷிப்த பகுதிகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டது அக்னிபுராணம். அன்று அந்தக் குலவரிசை பற்றிய செய்தி ஒரு தொன்மையான நம்பிக்கையாக காந்தார மன்னர்களிடமும் காந்தார மக்களிடமும் இருந்திருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13
அடுத்த கட்டுரைவலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி