நாகமும் யோகமும்

ஜெயமோகன் அண்ணா

எப்படி இருக்கீங்க?. Astrophysicist Martin Rees எழுதின புத்தகம் ” Just Six Numbers-The Deep Force that shapes Universe” . அதில இருந்து எடுத்த படம் இது. உங்க மகாபாரதம் Theory நாகபாம்பு நியாபகம் வந்தது .

” இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது. அந்த ஆதிநாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை. ஆகவே அது தன்னை நாகம் என்று அழைத்துக்கொண்டது. நான் இல்லை என அதற்குப்பொருள்.”.

இங்க uthamayanmuni Buddhist Temple (http://www.uttamayanmuni.org/) போனபோது பாம்புடன் சில சிலைகளை பார்த்தேன்(Picture attached) அப்பொதும் இதே நியாபகம்.

image

Naga paambu

அன்புள்ள பன்னீர்செல்வம்

பிரபஞ்சம் பற்றிய ஊகங்கள் எல்லா பண்பாடுகளுக்கும் வெவ்வேறு வகையில் காணப்படும். பழங்குடிப்பண்பாடுகளுக்குக் கூட. இந்துமதம் அத்தகைய பலநூறு உருவகங்களின் தொகை. அதில் முக்கியமானது நாகம். அது உலகமெங்கும் உள்ளதுதான். சமணமும் பௌத்தமும் அதில் அடக்கம்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18